பாகிஸ்தான் அணிக்கு எதிரான 4 ஆவது மற்றும் 5 ஆவது ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை அணியில் 22 வயதுடைய வலது கை துடுப்பாட்ட வீரர் சதீர சமரவிக்ரமவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்றுவருகின்றது.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக டுபாயில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதீர சமரவிக்ரம தனது கன்னி டெஸ்டில் விளையாடியிருந்த நிலையில் அவருக்கு ஒருநாள் போட்டிக்கான வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சதீர புனித ஜோசப் கல்லூரியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.