இந்தியப் பிரதமர் மோடி அளித்த இரவு விருந்தில் பங்கேற்காமல் தவிர்த்தார் சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங் 

Published By: P. Saranya

13 Sep, 2026 | 12:44 PM
image

இந்தியப் பிரதமர் மோடி அளித்த இரவு விருந்தில் பங்கேற்காமல் தவிர்த்து விட்டு சீன ஜனாதிபதி  ஸீ ஜின்பிங் ஹோட்டலுக்கு சென்று விட்டதாக இந்திய ஊடகங்கங் செய்தி வெளியிட்டுள்ளன.

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் கடந்த 11 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரையிலான 3 நாட்களுக்கு 18ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இதில், உறுப்பு நாடுகளின் தலைவர்கள், பிற நாடுகளின் தலைவர்கள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். இதற்காக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங் நேற்று சனிக்கிழமை இந்தியாவுக்கு சென்றார். பின்னர் பிரிக்ஸ் மாநாட்டு நிகழ்வுகளுக்கு இடையே இந்தியப் பிரதமர் மோடி ஸீ ஜின்பிங் சந்திப்பு நிகழ்ந்தது. இதன்போது, இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

அதில் இந்தியப் பிரதமர் மோடி, 

இருதரப்பு உறவுகளை பரஸ்பர மரியாதை, பரஸ்பர உணர்திறன் மற்றும் பரஸ்பர நலன்கள் அடிப்படையில் இரு நாடுகளும் கொண்டு செல்ல வேண்டும். இருதரப்பு உறவுகளின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு, எல்லைப்பகுதிகளில் அமைதியும் நிலைத்தன்மையும் இன்றியமையாத அடிப்படையாக திகழ்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

சீன அதிபர் ஸீ ஜின்பிங் பேசும்போது,

நமது தேசிய சூழல்கள் வேறாக இருந்தாலும், பொதுவான வளர்ச்சி பாதையை தொடரவும், ஒருவருக்கொருவர் முழுமையான ஆதரவாகவும் இருக்க முடியும். சிக்கலான மற்றும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த சர்வதேச சூழல் நிலவும் நிலையில், உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட இரு நாடுகளாகவும், உலகளாவிய தெற்கின் முக்கிய உறுப்பினர்களாகவும் திகழும் சீனாவும் இந்தியாவும் குறிப்பிடத்தக்க பொறுப்புகளை சுமக்கின்றன எனத் தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள், உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிற நாடுகளின் தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்களுக்கு இந்தியப் பிரதமர் மோடி சார்பில் இரவு விருந்து அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதில் சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங் கலந்து கொள்ளவில்லை. அவர் அதனை புறக்கணித்து விட்டார் என கூறப்படுகிறது. அதற்கான காரணம் உடனடியாக வெளியிடப்படவில்லை. எனினும், அவர் ஓய்வெடுப்பதற்காக ஹோட்டலுக்கு சென்று விட்டார் என தகவல் தெரிவிக்கப்படுகின்றது.

இதேபோன்று, அபுதாபி இளவரசர் ஷேக் கலீத் பின் முகமதுவும் மாநாட்டில் பங்கேற்று விட்டு நாடு திரும்பியுள்ளார். அவரும் இரவு விருந்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், ரஷ்ய ஜனாதிபதி புட்டின் மற்றும் பிற தலைவர்கள் இரவு விருந்தில் கலந்து கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

6 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த...

2026-10-08 17:30:29
news-image

இதுவரை 8 போர்களை நிறுத்தியுள்ளேன் ;...

2026-10-08 11:29:25
news-image

சவூதி விமான நிலையங்கள் மீது ஹவுதி...

2026-10-08 10:23:37
news-image

தமிழகத்தில் நடைபெற்ற இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில்...

2026-10-07 16:07:38
news-image

யேமன் விமான நிலையத்தின் மீது ஹவுதி...

2026-10-07 14:29:04
news-image

பிரான்ஸின் பல இடங்களில் பாடசாலை மாணவர்கள்...

2026-10-07 11:16:06
news-image

மேற்காசிய பதற்றம், புயல் தாக்கம் ;...

2026-10-07 09:50:04
news-image

காஸாவை மூச்சுத்திணறச் செய்து உயிர்வாழ்வதற்கான வழிகளை...

2026-10-06 16:50:35
news-image

தமிழகத்தில் மதுராந்தகம் - தாராபுரம் ஆகிய...

2026-10-06 15:53:29
news-image

பிளைடுபாய் துணை விமானி நியூசிலாந்தில் விமானப்...

2026-10-06 15:03:21
news-image

ஹெலிகொப்டரிலிருந்து குழந்தையுடன் இறங்கும்போது நிலைதடுமாறிய அமெரிக்க...

2026-10-06 13:53:31
news-image

ஸ்பெயினில் நாடாளுமன்றம் கலைப்பு ; பொதுத்...

2026-10-06 12:40:08