தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் சர்வதேச கார் பந்தய வீரரான அஜித்குமார் ஆகியோருக்கிடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பொன்று லண்டனில் நடைபெற்றுள்ளது.
லண்டன் சில்வர்ஸ்டோன் பந்தயக் களத்தில் நடைபெற்ற 'மிச்செலின் லே மான்ஸ்' கோப்பைக்கான கார் பந்தயத்தின் தொடக்க நிகழ்விற்கு முன்னதாகவே இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்ற இக் கார் பந்தயப் போட்டியைத் தமிழக முதலமைச்சர் விஜய் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பச்சைக் கொடியசைத்து உத்தியோகபூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
போட்டி தொடங்குவதற்கு முன்னதாகப் பந்தயக் களத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்யை, அஜித்குமார் நேரில் வரவேற்றார். இதன்போது தமிழ் சினிமாவின் இரு துருவங்களாகக் கருதப்படும் இருவரும் ஒருவரையொருவர் கட்டித்தழுவித் தமது அன்பைப் பரிமாறிக்கொண்டனர்.
தமிழகத்திற்குப் புதிய தொழில்துறை முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் அரசுமுறைப் பயணமாக லண்டன் சென்றுள்ள முதலமைச்சர் விஜய், தமிழகத்தில் எதிர்காலத்தில் அமையவுள்ள புதிய 'மோட்டார் விளையாட்டு நகரத்திற்கான' (Motor Sports City) உட்கட்டமைப்பு வசதிகளை ஆராயும் நோக்கிலுமே இப் பந்தயக் களத்திற்கு வருகை தந்திருந்தார். இப் போட்டியில் அஜித்குமார் தனது அணியின் சார்பாகப் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பல ஆண்டுகளுக்குப் பின்னர் இருபெரும் நட்சத்திரங்களும் பொதுவெளியில் சந்தித்த இந்தக் காட்சி, உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களையும் ரசிகர்களையும் பெருமளவில் நெகிழ வைத்துள்ளது.





















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM