பாகிஸ்தானுடனான 3ஆவது டெஸ்டில் 8 விக்கெட்களால் வெற்றிபெற்ற இங்கிலாந்து தொடரை முழுமையாக கைப்பற்றியது

13 Sep, 2026 | 01:42 AM
image

(நெவில் அன்தனி)

பாகிஸ்தானுக்கு எதிராக பேர்மிங்ஹாம், எஜ்பெஸ்டன் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (12) நிறைவடைந்த 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 8 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 3 - 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முழுமையாக சுவீகரித்தது.

இந்தத் தொடரில் பாகிஸ்தான் தனது ஆறாவதும் கடைசியுமான இன்னிங்ஸில் முதல் தடவையாக 200க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றது.

எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 449 ஓட்டங்களைக் குவித்தது.

இந்தத் தொடர் முழுவதும் இந்த எண்ணிக்கையே பாகிஸ்தானினால் ஓர் இன்னிங்ஸில் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கையாகும்.

ஆனால், அந்த எண்ணிக்கை அதன் தோல்வியைத் தவிர்ப்பதற்கு போதுமானதாக அமையவில்லை.

போட்டியின் மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை அன்று பாகிஸ்தானின் இரண்டாவது இன்னிங்ஸில் அறிமுக வீரர் ரஸாஉல்லா அற்புதமாக துடுப்பெடுத்தாடி 4 பவுண்டறிகள். 9 சிக்ஸ்களுடன் 81 ஓட்டங்களைக் குவித்தார்.

அவருக்கு பக்கபலமாக துடுப்பெடுத்தாடிய மொஹமத் அபாஸ் 5 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 42 ஓட்டங்களைப் பெற்றார்.

அவர்கள் இருவரும் 9ஆவது விக்கெட்டில் 121 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்துக்கு சோதனையைக் கொடுத்தனர்.

ஆனால், வெற்றி இலக்கு வெறும் 130 ஓட்டங்களாக இருந்ததால்  இங்கிலாந்து   வெற்றி இலக்கை  இலகுவாக   அடைந்து வெற்றிபெற்றது.

அணித் தலைவர் ஜோ ரூட், ஜோர்டன் கொக்ஸ் ஆகிய இருவரும் ஆட்டம் இழக்காமல் அரைச் சதங்கள் குவித்ததுடன் பிரிக்கப்படாத 3ஆவது  விக்கெட்டில் 128 ஓட்டங்களைப் பகிர்ந்து தமது அணியை வெற்றி அடையச் செய்தனர்.

எண்ணிக்கை சுருக்கம்

பாகிஸ்தான் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 133 (சவூத் ஷக்கீல் 43, மொஹம்மத் அபாஸ் 21, ரஸாஉல்லா 11, ஜொஷ் டங் 42 - 2 விக்., ஒல்லி ரொபின்சன்  15 - 3 விக்., ஜொவ்ரா ஆச்சர் 25 - 3 விக்.)

இங்கிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 453 (ஹெரி ப்றூக் 75, ஜெமி ஸ்மித் 69, டான் லோரன்ஸ் 65, எமிலியே கே 60, ஒல்லி ரொபின்சன் 50, உதிரிகள் 45, ரஸாஉல்லா 148 - 4 விக்., மொஹம்மத் இம்ரான் 47 - 2 விக்., மொஹம்மத் அலி 92 - 2 விக்.)

பாகிஸ்தான் 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 449 (ஷான் மசூத் 95, ரஸாஉல்லா 81, பாபர் அஸாம் 76, அஸான் அவைஸ் 59, மொஹம்மத் அபாஸ் 42, கஸ் அட்கின்சன் 109 - 3 விக்., டான் லோரன்ஸ் 17 - 2 விக்., ஒல்லி ரொபின்சன் 54 - 2 விக்., ஜொஷ் டங் 106 - 2 விக்.)

இங்கிலாந்து - வெற்றி இலக்கு 130 ஓட்டங்கள் - 2ஆவது இன்: 130 - 2 விக். (ஜோ ரூட் 62 ஆ.இ., ஜோர்டன் கொக்ஸ் 59 ஆ.இ.)

ஆட்டநாயகன்: டான் லோரன்ஸ்

தொடர் நாயகன்:  (இங்கிலாந்து)   ஒல்லி ரொபின்சன்  58 ஓட்டங்கள் 21 விக்கெட்கள்

தொடர் நாயகன்:  (பாகிஸ்தான்)  மொஹம்மத் அபாஸ்  86 ஓட்டங்கள், 13 விக்கெட்கள்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புளூ ஸ்டாரின் கடும் சவாலுக்கு மத்தியில்...

2026-10-11 21:02:58
news-image

றினோன் கழகத்தை வீழ்த்தி வரலாறு படைத்தது...

2026-10-11 16:06:32
news-image

பவர்ப்ளேயில் எதிர்கொள்ளும் சவால்களை சமாளித்து 2ஆவது...

2026-10-11 15:29:57
news-image

டிபெண்டர்ஸ் வீரர் ஒருவர் அநாவசியமாக மஞ்சள்...

2026-10-09 23:39:40
news-image

லஹிருவின் அரைச் சதத்தை பர்ஹான், சதாகத்...

2026-10-09 23:32:54
news-image

துடுப்பாட்டத்தில் லஹிரு அபாரம்;  பாகிஸ்தானுக்கு 183...

2026-10-09 20:33:44
news-image

பாகிஸ்தானுடனான முதலாவது ரி20இல் இலங்கை முதலில்...

2026-10-09 18:21:16
news-image

நிலைமாறுதல் கட்டத்தில் உள்ள இலங்கையை ரி20...

2026-10-09 16:17:12
news-image

டிபெண்டர்ஸ் - நியூ யங்ஸ் போட்டியுடன்...

2026-10-09 15:16:43
news-image

பெடரேஷன் கிண்ண கால்பந்தாட்டத்தில் 25 பயிற்சியகங்களைச்...

2026-10-08 21:44:25
news-image

குசல் மெண்டிஸ் இலங்கை டெஸ்ட் அணியின்...

2026-10-08 16:20:42
news-image

தனஞ்சய டி சில்வா இலங்கை டெஸ்ட்...

2026-10-08 12:37:22