கலம்போ எவ்சியிடம் இரண்டு கோல்கள் பின்னிலையில் இருந்த ரெட் ஸ்டார் மீண்டுவந்து ஆட்டத்தை சமப்படுத்தியது

12 Sep, 2026 | 08:21 PM
image

(நெவில் அன்தனி)

 கலம்போ எவ்சி அணிக்கும் பேருவளை தர்கா நகர் ரெட் ஸ்டார் அணிக்கும் இடையில்    கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் சனிக்கிழமை (12) பிற்பகல் நடைபெற்ற சுப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டி 2 - 2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 70ஆவது நிமிடம் வரை 2 கோல்கள் பின்னிலையில் இருந்த ரெட் ஸ்டார் கழகம் 5 நிமிட இடைவெளியில் இரண்டு கோல்களைப் போட்டு ஆட்டத்தை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டது.

இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்ட இப் போட்டியின் 15ஆவது நிமிடத்தில் ரிபவுண்ட் பந்தை சியாரோ லியோன் வீரர் இப்ராஹிம் லெப்பே தலையால் முட்டி கலம்போ எவ்சியின் முதலாவது கோலைப் போட்டார்.

சற்று நேரத்தில் ரெட் ஸ்டார் வீரர் மொஹமத் பர்ஹாத் சுமார் 30 யார் தூரத்திலிருந்து பலமாக உதைத்த பந்து கலம்போ எவ்சியின் இடது கோல் கம்பத்தில் பட்டு திசை திரும்பியது.

எவ்வாறாயினும் போட்டியின் 34ஆவது நிமிடத்தில் கலம்போ எவ்சியின் பின் கள வீரர் மொஹமத் அப்துல்லா சுமார் 22 யார் தூரத்திலிருந்து உதைத்த பந்து மின்னல் வேகத்தில் கோலினுள் புகுந்தது.

இதனைத் தொடர்ந்து இடைவேளையின்போது கலம்போ எவ்சி 2 - 0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இடைவேளைக்குப் பின்னர் கலம்போ எவ்சி கோல் எண்ணிக்கையை அதிகரிக்க கடுமையாக முயற்சித்தது. ஆனால் அதன் முயற்சிகள் தவறிய வண்ணம் இருந்தது.

மறுபக்கத்தில் ரெட் ஸ்டார் கோல் போடுவதற்கு எடுத்த முயற்சிகள் சில தடுக்கப்பட்டன.

போட்டியின் 71ஆவது நிமிடத்தில் கலம்போ எவ்சியின் பின்களத்தில் ஏற்பட்ட தடுமாற்றத்தைப் பயன்படுத்தி ரெட் ஸ்டார் அணியின் மாற்று வீரர் பீட்டர் சில்வானுஸ் மிகவும் சாதுரியமாக வலது கோல் முலைக்குள் பந்தைப் புகுத்தி தனது அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தார்.

மேலும் ஐந்து நிமிடங்கள் கழித்து கலம்போ எவ்சி வீரர் ஒருவர் தனது பெனல்டி எல்லைக்குள் வைத்து பந்தை கையால் தட்டியதாகத் தீர்மானித்த  மத்தியஸ்தர் ஏ.எம். ஜவ்ரான்     பெனல்டி ஒன்றை   ரெட் ஸ்டார் அணிக்கு வழங்கினார்.

ஆனால், அது ஹாண்ட் போல் அல்ல என கலம்போ எவ்சி தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், மத்தியஸ்தர் தனது தீர்ப்பில் உறுதியாக இருந்தார்.

அந்தப் பெனல்டியை அசண்டே ஜெரோம் கோலாக்கி கோல் நிலையை சமப்படுத்தினார்.

அவரது பெனல்டியைத் தடுப்பதற்கு கலம்போ எவ்சி கோல் காப்பாளர் மொஹமத் இம்ரான் சரியான திக்கில் தாவியபோதிலும் பந்து அவரது கைகளில் பட்டு கோலினுள்ள புகுந்தது.

போட்டியின் 80ஆவது நிமிடத்தில் கலம்போ எவ்சி வீரர் சலன ப்ரமன்த அநாவசியமாக மத்தியஸ்தர் ஜவ்ரானின் இரண்டாவது மஞ்சள் அட்டைக்கு இலக்காகி சிவப்பு அட்டையுடன் களம் விட்டு வெளியேறினார்.

கடந்த மூன்று போட்டிகளில் கலம்போ எவ்சி வீரர்கள் தொடர்ச்சியாக சிவப்பு அட்டைக்கு இலக்கானது ஆச்சரியத்தை ஏற்படுத்திவிட்டுள்ளது.

தொடர்ந்து இரண்டு அணியினரும் வெற்றி கோலுக்காக முயற்சித்த போதிலும் அவை கைகூடாமல் போக ஆட்டம் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடப்பு சம்பியன் புளூ ஸ்டார் கழகத்தை...

2026-10-16 21:03:05
news-image

40ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு...

2026-10-16 20:39:21
news-image

19 வயதின் கீழ் பெண்கள் மும்முனை...

2026-10-16 20:33:34
news-image

சுப்பர் சிக்ஸ் கால்பந்தாட்டம் சூடுபிடித்துள்ளது, போட்டிக்கு...

2026-10-16 14:45:40
news-image

2028 ஒலிம்பிக் பதக்கக் கனவை நோக்கிய...

2026-10-15 12:55:01
news-image

சீ ஹோக்ஸ் அணியை 2 -...

2026-10-15 01:17:48
news-image

குசல் மெண்டிஸ் துடுப்பாட்டத்தில் அபராம்; இலங்கைக்கு...

2026-10-13 23:00:18
news-image

இலங்கைக்கு 169 ஓட்டங்களை வெற்றி இலக்காக...

2026-10-13 20:51:46
news-image

கணிசமான ஓட்டங்கள் குவிக்கப்பட்ட பங்களாதேஷ் -...

2026-10-13 21:20:14
news-image

ரென்ஷோ துடுப்பாட்டத்திலும் ஹேஸ்ல்வூட் பந்துவீச்சிலும் அசத்தல்;...

2026-10-13 19:30:55
news-image

பாகிஸ்தானுடன் கடைசி ரி20 போட்டி இன்று;...

2026-10-13 16:26:49
news-image

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர்; இலங்கை...

2026-10-13 13:20:47