சுண்டிக்குளம் மற்றும் கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடி: 4 பேர் கைது!

12 Sep, 2026 | 06:02 PM
image

யாழ்ப்பாணம் சுண்டிக்குளம் மற்றும் கட்டைக்காடு கடல் மற்றும் கடற்கரைப் பகுதிகளை உள்ளடக்கிய பகுதியில் இலங்கை கடற்படையினரால் நேற்று வெள்ளிக்கிழமை (11) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 3 டிங்கி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

வடக்கு கடற்படை கட்டளையின் படகுகள் மற்றும் வெற்றிலைக்கேணி கடற்படை முகாம் அதிகாரிகளால் இச் சோதனை நடவடிக்கை கூட்டு முயற்சியாக முன்னெடுக்கப்பட்டது.

தடைசெய்யப்பட்ட ஒளி விளக்குகளைப்  பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டபோதே இவர்கள் சட்டத்தின் கைகளில் சிக்கியுள்ளனர்.

3 டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 1,900 கிலோகிராமிற்கும் அதிகமான மீன் தொகுதி என்பன கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட 4 சந்தேகநபர்களும் புத்தளம் மாவட்டத்தின் மதுரங்குளி மற்றும் பள்ளிவாசல்பாடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், டிங்கி படகுகள் மற்றும் கைப்பற்றப்பட்ட மீன் தொகுதி என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறைச்சாலைச் சட்டங்கள் மற்றும் விதிகளைப் புதுப்பிக்க...

2026-10-10 16:18:23
news-image

மெகசின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷிரந்தி ராஜபக்‌ஷவை...

2026-10-10 15:53:19
news-image

பின்னோக்கிச் சென்ற பேருந்து மோதி மோட்டார்...

2026-10-10 15:46:57
news-image

மெட்ரோ பேருந்து மீது மோதிய சொகுசு...

2026-10-10 15:26:47
news-image

சவூதி அரேபிய விமான நிலையங்கள் மீது...

2026-10-10 15:03:27
news-image

மாத்தளையில் பொலிஸார் மீது தாக்குதல் :...

2026-10-10 15:06:34
news-image

யாழில் நீண்டகாலமாக மணல் கடத்தலில் ஈடுபட்டவர்...

2026-10-10 14:41:50
news-image

அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு சவூதியிடம் சனத்...

2026-10-10 14:26:01
news-image

2027இல் முக்கிய இராஜதந்திர மற்றும் பொருளாதார...

2026-10-10 14:54:47
news-image

போதைப்பொருள் கடத்தல் சந்தேக நபரின் 3.5...

2026-10-10 14:30:02
news-image

அனோஜன் வழக்கு : சவூதி உயர்...

2026-10-10 13:16:59
news-image

சவூதி - ரியாத்திற்கான விமானச் சேவைகளை...

2026-10-10 13:05:16