நாமல் சிறைசென்றுள்ளமை அரசியல் பழிவாங்கல் அல்ல இலஞ்சக்குற்றச்சாட்டே காரணமென பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவிப்பு

Published By: Digital Desk 1

12 Sep, 2026 | 05:17 PM
image

(இராஜதுரை ஹஷான்)

திருடர்கள் சிறைச் செல்லும் போது ‘வெற்றி உண்டாகட்டும்’  (ஜயவேவா) என்று குறிப்பிடும் கலாசாரம் மாற வேண்டும். இலஞ்சம் பெற்ற குற்றத்துக்காகவே நாமல் ராஜபக்‌ஷ சிறைச் சென்றுள்ளார். இதுவொன்றும் அரசியல் பழிவாங்கல் அல்ல என  இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்தார்.

கொழும்பில் சனிக்கிழமை(12)  நடைபெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஊழல்வாதிகளுக்கும், படுகொலையாளிகளுக்கும் எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது அதனை அரசியல் பழிவாங்கள் என்று குறிப்பிட்டு எதிர்க்கட்சியினர் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள்.

எயார் பஸ் கொள்வனவின் போது இலஞ்சம் பெற்றதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் தான் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

நல்லாட்சி அரசாங்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகளுக்கு அமைவாகவே நாமல் ராஜபக்‌ஷ தற்போது கைது செய்யப்பபட்டுள்ளார். திருடர்களை பிடிப்பதாக நல்லாட்சி அரசாங்கத்தில் மக்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்டது. ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.மாறாக திருடர்கள் பாதுகாக்கப்பட்டார்கள்.

திருடர்கள் சிறைச் செல்லும் போது ‘வெற்றி உண்டாகட்டும்’  (ஜயவேவா) என்று குறிப்பிடும் கலாசாரம் மாற வேண்டும். இலஞ்சம் பெற்ற குற்றத்துக்காகவே நாமல் ராஜபக்‌ஷ சிறைச் சென்றுள்ளார்.இதுவொன்றும் அரசியல் பழிவாங்கல் அல்ல.

ராஜபக்‌ஷர்களின் ஊழல் மோசடியாலும், தவறான பொருளாதார முகாமைத்துவத்தினாலும் நாடு வங்குரோத்து நிலையடைந்தது. இதனை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆகவே நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியவர்களால் மீண்டும் நாட்டை அபிவிருத்தியடையச் செய்ய முடியாது என்றார்.

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் விவகாரத்துக்கு உடனடித் தீர்வு...

2026-10-11 20:12:32
news-image

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள தெஹிவளை சென்டோவின் பிரதான...

2026-10-11 18:19:13
news-image

சிறைவைக்கப்படும் பிக்குகள் தொடர்பான சிறைச்சாலை விதிகளைப்...

2026-10-11 17:26:42
news-image

கொட்டாவையில் போதைப்பொருளுடன் 'தெஹிவளை சண்டோ'வின் பிரதான...

2026-10-11 17:16:46
news-image

அனோஜன் சிவராசா விவகாரம் ; சவூதி...

2026-10-11 17:43:38
news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில்...

2026-10-11 16:19:51
news-image

தம்புளை ஆரம்ப வைத்தியசாலை கட்டிடத்திற்காக ஒதுக்கப்பட்ட...

2026-10-11 16:52:21
news-image

கரடியானையில் பொலிஸார் அதிரடி சோதனை; 75...

2026-10-11 16:32:49
news-image

பஸ் மோதி பெண் உயிரிழப்பு

2026-10-11 16:11:21
news-image

தெஹிவளையில் போதைப்பொருளுடன் இரு பெண்கள் உட்பட...

2026-10-11 16:10:13
news-image

நாட்டில் சீரற்ற வானிலையால் 5,700 பேர்...

2026-10-11 16:04:31
news-image

மூதூர் கட்டைபறிச்சான் பாலத்தைப் புனரமைக்க நடவடிக்கை...

2026-10-11 15:56:40