வவுனியா வெடுக்குநாறிமலையில் பௌத்த பிக்கு தலைமையிலான குழு சென்றுள்ள நிலையில் பொலிஸார் குவிப்பு!

12 Sep, 2026 | 05:16 PM
image

வவுனியா வெடுக்குநாறிமலையில் பௌத்த பிக்கு தலைமையிலான குழு சென்றுள்ள நிலையில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஆலயத்திற்கு செல்லும் சைவ பக்தர்களுக்கு பொலிஸார் இடையூறை ஏற்படுத்தாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக சனிக்கிழமை (12) காலை அப்பகுதிக்கு பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினர் விசேட பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்காகச் சென்றிருந்தனர். 

அதேநேரம் அப்பகுதியில் சைவ மக்களும் வழிபாடுகளுக்குத் சென்றிருந்தார்கள்.  இதன் காரணமாக அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளார்கள்.

அதேநேரம் ஆலயத்திற்குச் செல்கின்ற சைவ மக்களுடைய வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் மறிக்கப்பட்டு வருவதுடன், அவர்களை நீண்ட தூரத்திற்கு நடந்து செல்லவே அனுமதிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழ் தேசிய பேரவையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி ந. காண்டீபன், வவுனியா வடக்கு பிரதைச சபை உப தவிசாளர் வி. சஞ்சுதன் உள்ளிட்டவர்களும் ஆலயத்திற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தீவிர வெப்பம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம்...

2026-10-10 17:47:10
news-image

நாடு முழுவதும் பொலிஸ் விசேட நடவடிக்கை...

2026-10-10 17:12:39
news-image

பியகம தொகுதியில் 10 இலட்சம் ரூபா...

2026-10-10 17:40:15
news-image

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள்...

2026-10-10 17:51:25
news-image

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு ; சம்பவத்துடன்...

2026-10-10 16:58:42
news-image

சிறைச்சாலைச் சட்டங்கள் மற்றும் விதிகளைப் புதுப்பிக்க...

2026-10-10 16:22:00
news-image

மெகசின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷிரந்தி ராஜபக்‌ஷவை...

2026-10-10 15:53:19
news-image

பின்னோக்கிச் சென்ற பேருந்து மோதி மோட்டார்...

2026-10-10 15:46:57
news-image

மெட்ரோ பேருந்து மீது திட்டமிட்டு மோதிய...

2026-10-10 17:06:52
news-image

யக்கல - கிரிக்கித்தமுல்ல பகுதியில் கசிப்புடன்...

2026-10-10 16:39:25
news-image

சவூதி அரேபிய விமான நிலையங்கள் மீது...

2026-10-10 15:03:27
news-image

மாத்தளையில் பொலிஸார் மீது தாக்குதல் :...

2026-10-10 15:06:34