அக்கரைப்பற்று – கல்முனை வீதியில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: குடும்பஸ்தர் பலி!

Published By: Digital Desk 1

12 Sep, 2026 | 05:15 PM
image

அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியின் பாலமுனைப் பகுதியில் இன்று சனிக்கிழமை (12) இடம்பெற்ற கோர வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தனியார் பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாலமுனையைப் பிறப்பிடமாகவும், அட்டாளைச்சேனை - 08 அக்கரையை வசிப்பிடமாகவும் கொண்ட 4 பிள்ளைகளின் தந்தையான அப்துல் சமது முபாரிஸ் என்பவரே இச் சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.

பாலமுனைப் பகுதியில் வைத்து எதிர்வந்த தனியார் பேருந்துடன் இவர் பயணித்த மோட்டார் சைக்கிள் பலமாக மோதியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தீவிர வெப்பம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம்...

2026-10-10 17:47:10
news-image

நாடு முழுவதும் பொலிஸ் விசேட நடவடிக்கை...

2026-10-10 17:12:39
news-image

பியகம தொகுதியில் 10 இலட்சம் ரூபா...

2026-10-10 17:40:15
news-image

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள்...

2026-10-10 17:51:25
news-image

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு ; சம்பவத்துடன்...

2026-10-10 16:58:42
news-image

சிறைச்சாலைச் சட்டங்கள் மற்றும் விதிகளைப் புதுப்பிக்க...

2026-10-10 16:22:00
news-image

மெகசின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷிரந்தி ராஜபக்‌ஷவை...

2026-10-10 15:53:19
news-image

பின்னோக்கிச் சென்ற பேருந்து மோதி மோட்டார்...

2026-10-10 15:46:57
news-image

மெட்ரோ பேருந்து மீது திட்டமிட்டு மோதிய...

2026-10-10 17:06:52
news-image

யக்கல - கிரிக்கித்தமுல்ல பகுதியில் கசிப்புடன்...

2026-10-10 16:39:25
news-image

சவூதி அரேபிய விமான நிலையங்கள் மீது...

2026-10-10 15:03:27
news-image

மாத்தளையில் பொலிஸார் மீது தாக்குதல் :...

2026-10-10 15:06:34