போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தைக்கு விளக்கமறியல்!

12 Sep, 2026 | 04:01 PM
image

டுபாயிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட, பெருளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் 'ஷிரான் பாசிக்' என்பவரின் தந்தையான அப்துல் ரசாக் மொஹமட் பாசிக் என்பவர் எதிர்வரும் செப்டம்பர் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று (12) கொழும்பு புதுக்கடை இலக்கம் 3 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே நீதவான் இக் கட்டளையைப் பிறப்பித்துள்ளார்.

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை  (11) இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

ஷிரான் பாசிக் போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக உழைத்ததாகக் கூறப்படும் 3 கோடி ரூபா பணத்தைப் பயன்படுத்தி, கம்பஹா பகுதியில் உள்ள சொகுசு வீடொன்றைத் தனது பெயரில் கொள்முதல் செய்தமை தொடர்பிலான விசாரணைகளின் அடிப்படையில் இக் கைது இடம்பெற்றுள்ளது.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் இக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மேலும், இச் சம்பவம் தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு  வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேருக்கு வழங்கப்பட்டுள்ள கடூழிய சிறை...

2026-10-13 13:49:00
news-image

சுருங்கிவரும் உழைக்கும் மக்கள் தொகையினால் அழுத்தத்துக்கு...

2026-10-13 16:41:45
news-image

இலங்கையின் குடும்பக் கடன்கள் அதிகரிப்பு –...

2026-10-13 15:01:45
news-image

வங்காள விரிகுடாவில் வளிமண்டலத் தளம்பல்: நாட்டின்...

2026-10-13 22:56:02
news-image

மதத் தலைவர்கள் விவகாரம்: சம்பிக்க ரணவக்க...

2026-10-13 17:29:58
news-image

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை விவகாரம்...

2026-10-13 15:48:47
news-image

நாட்டின் இறையாண்மையை விட்டுக்கொடுத்து எந்தவொரு வெளிநாட்டு...

2026-10-13 17:31:45
news-image

இலங்கையில் இணையவழிக் குற்றங்களுக்கு இலக்காகும் சிறுவர்கள்:...

2026-10-13 15:24:54
news-image

ஞானசார தேரர் விவகாரம் ; சிறைச்சாலை ...

2026-10-13 16:49:19
news-image

நாட்டின் இறையாண்மையை விட்டுக்கொடுத்து எந்தவொரு வெளிநாட்டு...

2026-10-13 21:55:19
news-image

மார்ச் மாதத்தின் பின்னரே நாணய நிதியத்துடனான...

2026-10-13 17:03:22
news-image

தலதா மாளிகை தாக்குதல் குறித்து ஜே.வி.பி...

2026-10-13 17:34:59