'நேச்சுரல் ஸ்டார்' நானியின் நடிப்பில் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில் ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிப்பில் உருவான 'தி பாரடைஸ்' திரைப்படம் எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் என படக் குழுவினர் உறுதிப்பட தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஹைதராபாத்தில் படக் குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.
அந்தத் தருணத்தில் படத்தின் நாயகனான நானி பேசுகையில், '' இப்படத்தின் வெளியீட்டு திகதியை ஏற்கனவே இரண்டு முறை அறிவித்துவிட்டு, அதன் பிறகு மாற்றம் பெற்றதால், வெளியீடு குறித்து சிறு தயக்கம் இருந்தது உண்மைதான்.
ஆனால் ரசிகர்கள் அளித்த ஆதரவு எங்களது பொறுப்பை கூடுதலாக்கி உள்ளது. இந்த திரைப்படம் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலாவின் பிரம்மாண்டமான பார்வையை திரையில் காட்சிப்படுத்தியுள்ளோம். இது எம்முடைய திரையுலக வாழ்க்கையில் மிகவும் கடினமான சவாலான படமாக அமைந்துள்ளது.
இப்படத்தில் தாய்க்கும் மகனுக்கும் இடையேயான புரட்சிகரமான பாசம் மிக்க கதையையும், அதன் அழுத்தமான பின்னணியையும் விவரிக்கிறது. பார்வையாளர்களுக்கு நிச்சயமாக அற்புதமான படமாளிகை அனுபவத்தை வழங்கும்.
போதிய கால அவகாசம் இல்லாததால் இப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிடவில்லை. இப்படத்தை எதிர்வரும் 24 ஆம் திகதி உலகம் முழுவதும் படமாளிகையில் திட்டமிட்டபடி வெளியாகிறது '' என்றார்.
இந்த திரைப்படத்தில் நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு, கீர்த்தி சுரேஷ், ஈஸ்வரி ராவ், தனிகலபரணி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சி ஹெச் சாய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தின் பாடல்கள்- டீசர்- ஆகியவை வெளியாகி கோடி கணக்கிலான டிஜிட்டல் பார்வைகளைப் பெற்று படத்தை பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் நிலையில்.. இத்திரைப்படம் எதிர்வரும் 24 ஆம் திகதி அன்று பட மாளிகையில் வெளியாகிறது என படக் குழுவினர் உறுதிப்பட தெரிவித்துள்ளனர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM