தெஹிவளை கைகுண்டுத் தாக்குதல்: இலக்கு மாறியதால் இரு சிறுவர்கள் பலி? - பொலிஸார் சந்தேகம்

12 Sep, 2026 | 03:38 PM
image

தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றின் மீது நேற்று வெள்ளிக்கிழமை  (11) இனந்தெரியாத நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட கைகுண்டுத் தாக்குதல், இலக்கு மாறி ஏற்பட்ட சம்பவம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன், அவர்களின் தந்தை காயமடைந்து களுபோவில போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில்  சிகிச்சைப் பெற்று வரும் நபரின் சகோதரரின் வீட்டை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்த வந்த நபர், வீட்டை மாற்றி அடையாளம் கண்டதால் இச் சோகச் சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்த இரு சிறுவர்களின் சடலங்களும் இன்று  சனிக்கிழமை (12) அவர்களின் வீட்டிற்கு அஞ்சலிக்காகக் கொண்டுவரப்படவுள்ளன.

இதேவேளை, மொறட்டுவை, கட்டுபெத்த பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் அதிபர் சஜீவ மெதவத்த, பொலிஸாரையோ அல்லது பொதுமக்களையோ மீறிச் செயற்பட பாதாளக் குழுக்களுக்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், பாதாளக் குழுக்கள் தங்களது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுக்காகக் கைகுண்டுத் தாக்குதல்களை ஒரு புதிய தந்திரோபாயமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேருக்கு வழங்கப்பட்டுள்ள கடூழிய சிறை...

2026-10-13 13:49:00
news-image

சுருங்கிவரும் உழைக்கும் மக்கள் தொகையினால் அழுத்தத்துக்கு...

2026-10-13 16:41:45
news-image

இலங்கையின் குடும்பக் கடன்கள் அதிகரிப்பு –...

2026-10-13 15:01:45
news-image

வங்காள விரிகுடாவில் வளிமண்டலத் தளம்பல்: நாட்டின்...

2026-10-13 22:56:02
news-image

மதத் தலைவர்கள் விவகாரம்: சம்பிக்க ரணவக்க...

2026-10-13 17:29:58
news-image

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை விவகாரம்...

2026-10-13 15:48:47
news-image

நாட்டின் இறையாண்மையை விட்டுக்கொடுத்து எந்தவொரு வெளிநாட்டு...

2026-10-13 17:31:45
news-image

இலங்கையில் இணையவழிக் குற்றங்களுக்கு இலக்காகும் சிறுவர்கள்:...

2026-10-13 15:24:54
news-image

ஞானசார தேரர் விவகாரம் ; சிறைச்சாலை ...

2026-10-13 16:49:19
news-image

நாட்டின் இறையாண்மையை விட்டுக்கொடுத்து எந்தவொரு வெளிநாட்டு...

2026-10-13 21:55:19
news-image

மார்ச் மாதத்தின் பின்னரே நாணய நிதியத்துடனான...

2026-10-13 17:03:22
news-image

தலதா மாளிகை தாக்குதல் குறித்து ஜே.வி.பி...

2026-10-13 17:34:59