'கன்னி மாடம்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி பிரபலமான நடிகர் ஸ்ரீராம் கார்த்திக் கதையின் நாயகனாக யதார்த்தமான கதாபாத்திரத்தில் உணர்வுபூர்வமாக நடித்திருக்கும் 'ஆகாயம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் 'தினந்தோறும்' நாகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆகாயம்' திரைப்படத்தில் ஸ்ரீராம் கார்த்திக், அலிஷா மிரானி, ஷீலா, கனிகா, சந்தான பாரதி, ஜெயப்பிரகாஷ், கிரி துவாரகிஷ், ஸ்ரீ தேவ கிருஷ்ணன், இந்துமதி மணிகண்டன், தீபா, சஞ்சனா நமிதாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு என். ஆர். ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார். ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை டெல்டா டாக்கீஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெயச்சந்திரன் மற்றும் கார்த்திகா தேவி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர்கள் ஆர்.வி உதயகுமார், பேரரசு, சசி, சேரன், சற்குணம், பாலசேகரன், சித்ரா லட்சுமணன், தயாரிப்பாளர் டி. சிவா ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றி படத்தின் இசையை வெளியிட்டனர்.
இந்த விழாவில் படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், '' குடி உள்ளே போனால் குடும்பம் வெளியே போயிடும் என்றொரு வசனம் இப்படத்தில் இருக்கிறது. மது அருந்துவதை பற்றி கதை இருந்தாலும்.. அதனை ரசிக்கும் வகையில் விவரித்திருக்கிறேன்.
இப்படத்தில் அரசியலும் உள்ளது. அத்துடன் இந்த திரைப்படம் அன்பை பேசுகிறது. இந்த உலகம் அன்பால் உருவானது. அந்த அன்பை தான் 'ஆகாயம்' பேசுகிறது '' என்றார்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM