தமிழ் சினிமாவின் நட்சத்திர வாரிசாக அறிமுகமாகி, ஒரு தசாப்தத்திற்கு பிறகு தனித்துவமான அடையாளத்துடன் முன்னணி நட்சத்திர நடிகருக்கான இடத்தை நோக்கி வேகமாக முன்னேறும் நடிகர் கௌதம் ராம் கார்த்திக் கதையின் நாயகனாக, அரசியல்வாதியாக, நடித்திருக்கும் 'பிளடி பாலிடிக்ஸ்' திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி அவருடைய சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இயக்குநர் தினா ராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'பிளடி பாலிடிக்ஸ்' திரைப்படத்தில் கௌதம் ராம் கார்த்திக், செல்வராகவன், பி. வாசு, அஞ்சனா நேத்ரன், ஏ.வெங்கடேஷ், லெனின் பாரதி, 'லொள்ளு சபா' மாறன், பாக்கியம் சங்கர், 'ஆதித்யா' கதிர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். அரசியலை மையப்படுத்தி பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கிராஃப்ட் பை ஜி கே பி நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்தத் திரைப்படத்தை இயக்குநர் கணேஷ் கே. பாபு வழங்குகிறார்.
இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் இதன் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் அரசியலைப் பற்றிய புரிதலையும், அரசியலின் இன்றைய சூழலையும் விவரிக்கும் காட்சிகள் இடம் பிடித்திருப்பதால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. குறிப்பாக அரசியல் தொடர்பான உரையாடல்கள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இதனிடையே இப்படத்தின் உரையாடலை எழுத்தாளரும், இயக்குநருமான ராஜுமுருகன் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM