இன்றைய சூழலில் எம்முடைய வருவாயிலிருந்து நாளாந்தம் சிறுக சிறுக சேமித்து வைத்தாலும், அவை மாத இறுதியிலோ அல்லது எதிர்பாராத தருணத்திலோ செலவு செய்யவேண்டிய நிர்பந்தம் உண்டாகிறது.
இத்தகைய தருணத்தில் எம்மில் பலரும் சேமிப்பில் இருக்கும் பணம் எந்த சூழ்நிலையிலும் தட்டுப்பாடு ஏற்படாமல் எம்மிடமே நீடித்திருக்க வேண்டும் என விரும்புவர்.
இதற்கும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் ஒரு சூட்சமமான குறிப்பை வழங்கியுள்ளனர்.
இதற்கு தேவையான பொருட்கள்
- தேக்கு மரத்தால் தயாரிக்கப்பட்ட பணப்பெட்டி
- ஏலக்காய்
- உலர் திராட்சை
கடந்த தசாப்தங்களில் எம்முடைய முன்னோர்கள் சொந்தமாக வீடு கட்டும் போது வீட்டின் நிலை வாசலையும், பணத்தை பாதுகாத்து சேமித்து வைக்கும் பணப்பெட்டியையும் தேக்கு மரத்தால் உருவாக்கி, அதை பொருத்துவார்கள்.
ஆனால் இன்றைய சூழலில் தேக்கு மர பயன்பாடு என்பது வெகுவாக குறைந்து விட்டது. இத்தகைய சூழலில் தேக்கு மரத்தாலான பண பெட்டி தற்போது இணையத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதில் உங்களுக்கு நம்பகமான தேக்கு மரத்தால் தயாரிக்கப்பட்ட பணப்பெட்டியை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
அதனுடன் ஆறு என்ற எண்ணிக்கையிலான ஏலக்காய் மற்றும் உலர் திராட்சையையும் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வெள்ளிக்கிழமை காலை ஆறு மணி முதல் ஏழு மணிக்குள்ளாக சுக்கிர ஹோரையில் பூஜை செய்து, தேக்கு மரத்தால் தயாரிக்கப்பட்ட பணப்பெட்டியில் ஆறு ரூபாய், 60 ரூபாய், 600 ரூபாய் 6 ஆயிரம் ரூபாய் என ஆறு எனும் எண்ணிக்கையில் ரூபாய் தாள்களை அந்த பண பெட்டிக்குள் வைத்து, அதனுடன் ஆறு ஏலக்காய் மற்றும் ஆறு உலர் திராட்சையை வைத்து விட வேண்டும்.
அத்துடன்' எந்த காரணத்திலும் இந்த தேக்கு மரப்பெட்டியில் சேமிக்கப்படும் பணம் செலவாக கூடாது. இவை பல்கி பெருக வேண்டும்' என மனதார பிரார்த்திக்க வேண்டும்.
இதன் பிறகு நீங்கள் திட்டமிட்டு மாதந்தோறும் சிறு தொகையை இந்த தேக்கு மரப்பெட்டியில் சேமித்து வந்தால், சேமிப்பு வளர்வதுடன் பண தட்டுப்பாடு ஏற்படாமல் மகிழ்ச்சியுடன் வாழலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM