ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வாகனங்களின் ‘ஸ்மார்ட் சாவிகள்’ திருட்டு ; ஊழியர் உள்ளிட்ட இருவர் கைது!

Published By: M.Priyanka

12 Sep, 2026 | 02:56 PM
image

ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் ஊடாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் 'ஸ்மார்ட் சாவிகளை'  திருடி விற்பனை செய்யும் கடத்தலில் ஈடுபட்டு வந்த துறைமுக ஊழியர் ஒருவரும், அச்சாவிகளை விலைக்கு வாங்கிய தொழிலதிபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் வெள்ளிக்கிழமை (11) ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, செப்டம்பர் 22 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.

துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் ஸ்மார்ட் சாவிகள் காணாமல் போவது தொடர்பாக துறைமுக பாதுகாப்பு திணைக்களம் நடத்திய தீவிர விசாரணையின் போது, அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அதனடிப்படையில், பாதுகாப்பு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக ஹம்பாந்தோட்டை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

துறைமுக பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் குற்றப் புலனாய்வுப் பணியகம் நடத்திய விசாரணை மற்றும் சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. 

திருடப்பட்ட ஸ்மார்ட் சாவிகள் குருநாகல் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு வாகனத்தின் வகைக்கு ஏற்ப ரூ. 6,000 முதல் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கடந்த சில மாதங்களில் சுமார் 45 ஸ்மார்ட் சாவிகளை விற்பனை செய்ததன் மூலம் அந்த ஊழியர் ரூ. 15 இலட்சத்திற்கும் அதிகமாக சம்பாதித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட ஊழியர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், குருநாகல் பகுதியில் வைத்து அந்தத் தொழிலதிபரும் கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்த ஸ்மார்ட் சாவிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஊடாக உள்நாட்டு வாகன இறக்குமதி தொடங்கப்பட்டதில் இருந்தே இக்கடத்தல் கும்பல் செயல்பட்டு வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

துறைமுக வளாகத்திற்குள் இதுபோன்ற திருட்டுச் சம்பவங்களைக் கண்டறிந்து தடுப்பதற்காக சிறப்புத் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருவதாக ஹம்பாந்தோட்டை துறைமுக பாதுகாப்பு திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேருக்கு வழங்கப்பட்டுள்ள கடூழிய சிறை...

2026-10-13 13:49:00
news-image

சுருங்கிவரும் உழைக்கும் மக்கள் தொகையினால் அழுத்தத்துக்கு...

2026-10-13 16:41:45
news-image

இலங்கையின் குடும்பக் கடன்கள் அதிகரிப்பு –...

2026-10-13 15:01:45
news-image

வங்காள விரிகுடாவில் வளிமண்டலத் தளம்பல்: நாட்டின்...

2026-10-13 22:56:02
news-image

மதத் தலைவர்கள் விவகாரம்: சம்பிக்க ரணவக்க...

2026-10-13 17:29:58
news-image

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை விவகாரம்...

2026-10-13 15:48:47
news-image

நாட்டின் இறையாண்மையை விட்டுக்கொடுத்து எந்தவொரு வெளிநாட்டு...

2026-10-13 17:31:45
news-image

இலங்கையில் இணையவழிக் குற்றங்களுக்கு இலக்காகும் சிறுவர்கள்:...

2026-10-13 15:24:54
news-image

ஞானசார தேரர் விவகாரம் ; சிறைச்சாலை ...

2026-10-13 16:49:19
news-image

நாட்டின் இறையாண்மையை விட்டுக்கொடுத்து எந்தவொரு வெளிநாட்டு...

2026-10-13 21:55:19
news-image

மார்ச் மாதத்தின் பின்னரே நாணய நிதியத்துடனான...

2026-10-13 17:03:22
news-image

தலதா மாளிகை தாக்குதல் குறித்து ஜே.வி.பி...

2026-10-13 17:34:59