இன்றைய சூழலில் நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்களில் பலருக்கு தாடை, முகம், வாய் ஆகிய பகுதிகளில் தசை இறுக்க பாதிப்பு ஏற்பட்டு, பேசுதல், விழுங்குதல் உள்ளிட்ட நாளாந்த செயல்பாடுகளில் பாரிய அசௌகரியங்களை எதிர்கொள்கிறார்கள்.
இதனை மருத்துவ மொழியில் ஓரோமாண்டிபுலர் டிஸ்டோனியா என வகைப்படுத்தப்பட்டு, இதற்குரிய நவீன சிகிச்சை வழங்கி நிவாரணம் அளிக்கப்படுவதாக வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
உலகளவில் நாற்பது வயதிற்கு மேற்பட்ட ஆண்களை விட பெண்களுக்கு அதிக அளவில் ஒரோபாண்டிபுலர் டிஸ்டோனியா எனும் பாதிப்பு ஏற்படுவதாகவும், இதற்கு தொடக்க நிலையில் சிகிச்சை பெற்றால், முழுமையான நிவாரணம் கிடைக்கும் என்றும் வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
உங்களுடைய வாய் தன்னிச்சையாக திறந்தாலோ தாடை இறுக்கமாக மூடிக்கொண்டாலோ, கீழ்தாடை ஒரு பக்கமாக அல்லது பின்புறமாகவோ நகர்வதில் அசௌகரியம் ஏற்பட்டாலோ, முகம் மற்றும் உதடுகளில் ஏதேனும் தன்னிச்சையான அசைவுகளும், நாக்கில் ஏதேனும் தன்னிச்சையான அசைவுகளும் ஏற்பட்டால், இவை ஓரோமாண்டிபுலர் டிஸ்டோனியா எனும் பாதிப்பின் அறிகுறியாக அவதானிக்க வேண்டும்.
எம்முடைய மூளை பகுதியிலிருந்து முகத்திற்கு கிடைக்கும் சமிங்ஞைகளை தசைகள் முறையற்ற வகையில் எதிர்கொண்டால், இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும் என வைத்தியர்கள் அவதானிக்கிறார்கள். மேலும் நரம்பியல் மண்டலத்தின் பாதிப்பு காரணமாகவும், பாரம்பரிய மரபணு குறைபாடு காரணமாகவும், இத்தகைய பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றும் வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.
வைத்தியர்கள் இத்தகைய அறிகுறிகள் உடன் வரும் நோயாளிகளுக்கு பிரத்யேக பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை உறுதிப்படுத்திய பிறகு , நவீன தொழில்நுட்பங்களுடன் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சை மூலமாக நிவாரணம் வழங்கப்படுகிறது.
மேலும் இவர்களுக்கு பிரத்யேக இயன்முரை சிகிச்சையும், ஊசி வடிவிலான சிகிச்சையும் அளிக்கப்பட்டு, நிவாரணம் வழங்கப்படுகிறது.
சிலருக்கு இத்தகைய தருணங்களில் பிரத்யேக சாதனங்களை நிவாரணத்திற்காக பாவிக்கும்படி வைத்தியர்கள் அறிவுறுத்துவார்கள். இதனைத் தொடர்ந்து பேச்சு பயிற்சி வழங்கியும் நிவாரணத்தை தருவர்.
வைத்தியர் வேணி
தொகுப்பு அனுஷா



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM