சில்வர்ஸ்டோனில் நடைபெறவுள்ள ‘Goodyear 4 Hours of Silverstone’ கார் பந்தயத்துக்கான சனிக்கிழமை நிகழ்வுகளின் அனைத்து நுழைவுச்சீட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதனால், சனிக்கிழமைக்கான நுழைவுச்சீட்டுகளை ஏற்கனவே பெற்றிருக்காதவர்கள் பந்தயத் திடலுக்கு வர வேண்டாம் என ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை, ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிகழ்வுகளுக்கான நுழைவுச்சீட்டுகள் இன்னும் விற்பனைக்கு உள்ளன. எனினும், அவையும் வேகமாக விற்பனையாகி வருவதால், ஆர்வமுள்ளவர்கள் விரைவாக நுழைவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் இந்தப் பந்தயத்தை தமிழக முதலமைச்சர் விஜய் ஆரம்பித்து வைக்கவுள்ளதால், பெருமளவான ரசிகர்கள் சில்வர்ஸ்டோன் பந்தயத் திடலுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, பந்தயத் திடலை நோக்கிச் செல்லும் வீதிகளில் வழக்கத்தைவிட அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, பந்தயத் திடலுக்கு பயணிக்கும் ரசிகர்கள் தங்களது பயணத்துக்கு வழக்கத்தைவிட கூடுதல் நேரத்தை ஒதுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமைக்கான நுழைவுச்சீட்டுகள் மற்றும் நிகழ்வு தொடர்பான மேலதிக தகவல்களை ஏற்பாட்டாளர்களின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM