அரசாங்கத்தின் செயல்கள் ,வாக்குறுதிகள் நிறைவேற்றாமையை கண்டித்து யாழில் தமிழ்கட்சிகள் போராட்டம்

12 Sep, 2026 | 02:50 PM
image

( எம்.நியூட்டன்)

அரசாங்கம் பதவியேற்று, இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் கொடுத்த வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை எனவும், வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறும் கோரி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி மத்திய பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை (12) ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் இடம்பெற்றுவருகிறது

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேர்தல் காலத்தில் தமிழ் மக்களிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வாக்குகளை பெற்று, இன்று 2 வருடங்கள் கழிந்த நிலையிலும் கொடுத்த வாக்குகள் நிறைவேற்றப்படவில்லை.

குறிப்பாக, வலி வடக்கில் 3 பகுதிகளில் மக்கள் தமது சொந்த நிலத்தை விடுவிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பலாலி விமான நிலையம் காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படாமல் தொடர்ந்தும் பின்னடிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தியா வழங்கிய 600 மில்லியன் ரூபா டொலர்களை வழங்கிய போதும், வேலைகளை செய்வதற்கான உடன்படிக்கைகளை மேற்கொள்ளாது காலம் கடத்தி வருகின்றனர்.

தேர்தல் காலத்தில் மாகாண சபை அதிகாரங்களை வழங்குவோம் என்றவர்கள், மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு எல்லளவும் விரும்பாத நிலை காணப்படுகிறது.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எவ்வித கரிசனையும் காட்டாது இழுத்தடிக்கின்றனர்

அது மாத்திரமின்றி, திட்டமிட்டு தமிழ் மக்கள் மீது திணிக்கும் தொல்லியல் துறை சார்ந்த விடயங்ளை முன்னெடுத்து வருகின்றனர் இவ்வாறான விடயங்களை கண்டித்து இப்போராட்டம் நடைபெற்றுவருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு ; சம்பவத்துடன்...

2026-10-10 16:58:42
news-image

சிறைச்சாலைச் சட்டங்கள் மற்றும் விதிகளைப் புதுப்பிக்க...

2026-10-10 16:22:00
news-image

மெகசின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷிரந்தி ராஜபக்‌ஷவை...

2026-10-10 15:53:19
news-image

பின்னோக்கிச் சென்ற பேருந்து மோதி மோட்டார்...

2026-10-10 15:46:57
news-image

மெட்ரோ பேருந்து மீது திட்டமிட்டு மோதிய...

2026-10-10 17:06:52
news-image

யக்கல - கிரிக்கித்தமுல்ல பகுதியில் கசிப்புடன்...

2026-10-10 16:39:25
news-image

சவூதி அரேபிய விமான நிலையங்கள் மீது...

2026-10-10 15:03:27
news-image

மாத்தளையில் பொலிஸார் மீது தாக்குதல் :...

2026-10-10 15:06:34
news-image

யாழில் நீண்டகாலமாக மணல் கடத்தலில் ஈடுபட்டவர்...

2026-10-10 14:41:50
news-image

திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தின் நம்பிக்கைப் பொறுப்பு...

2026-10-10 16:26:27
news-image

அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு சவூதியிடம் சனத்...

2026-10-10 14:26:01
news-image

2027இல் முக்கிய இராஜதந்திர மற்றும் பொருளாதார...

2026-10-10 14:54:47