சட்டவிரோத மீன்பிடி: இலங்கை கடற்படையினரின் விசேட நடவடிக்கையில் 65 பேர் கைது!

12 Sep, 2026 | 02:48 PM
image

இலங்கை கடற்படையினரால் செப்டம்பர் 01 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நாட்டின் கடற்பரப்பு மற்றும் உள்நாட்டு நீர்ப்பரப்புகளை உள்ளடக்கிய வகையில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 65 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், சட்டவிரோத மீன்பிடி முறைகள், வின்ச் (Winch) இயந்திரங்கள் மற்றும் டிராக்டர்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 63 சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை பொலிஸாருடன் இணைந்து காத்தான்குடி நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, தடைசெய்யப்பட்ட 44 மீன்பிடி வலைகளுடன் மேலும் 02 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச் சோதனைகளின் போது 26 டிங்கி படகுகள் , 01 கப் ரக வாகனம்  மற்றும் 02 டிராக்டர்கள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் உபகரணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கோட் பே, கிண்ணியா, மூதூர், திருகோணமலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் பொத்துவில் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறைச்சாலைச் சட்டங்கள் மற்றும் விதிகளைப் புதுப்பிக்க...

2026-10-10 16:22:00
news-image

மெகசின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷிரந்தி ராஜபக்‌ஷவை...

2026-10-10 15:53:19
news-image

பின்னோக்கிச் சென்ற பேருந்து மோதி மோட்டார்...

2026-10-10 15:46:57
news-image

மெட்ரோ பேருந்து மீது மோதிய சொகுசு...

2026-10-10 15:26:47
news-image

சவூதி அரேபிய விமான நிலையங்கள் மீது...

2026-10-10 15:03:27
news-image

மாத்தளையில் பொலிஸார் மீது தாக்குதல் :...

2026-10-10 15:06:34
news-image

யாழில் நீண்டகாலமாக மணல் கடத்தலில் ஈடுபட்டவர்...

2026-10-10 14:41:50
news-image

திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தின் நம்பிக்கைப் பொறுப்பு...

2026-10-10 16:26:27
news-image

அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு சவூதியிடம் சனத்...

2026-10-10 14:26:01
news-image

2027இல் முக்கிய இராஜதந்திர மற்றும் பொருளாதார...

2026-10-10 14:54:47
news-image

போதைப்பொருள் கடத்தல் சந்தேக நபரின் 3.5...

2026-10-10 14:30:02
news-image

அனோஜன் வழக்கு : சவூதி உயர்...

2026-10-10 13:16:59