இந்தியாவில் தனது தொழில்நுட்ப முதலீட்டை மேலும் விரிவாக்கும் நோக்கில், கூகுள் நிறுவனம் கர்நாடக மாநிலம் பெங்களூரில் 'அனந்தா' (Ananta) என்ற பிரம்மாண்டமான புதிய வளாகத்தைத் திறந்து வைத்துள்ளது.
கூகுளின் இந்திய அலுவலகக் குழுவும், உள்நாட்டு வடிவமைப்புத் குழுவும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த நவீன வளாகம், உலகளவில் கூகுள் நிறுவனத்தின் மிகப்பெரிய அலுவலகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
ஊழியர்களிடையே ஒத்துழைப்பையும் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளையும் தூண்டும் வகையில் இதன் ஒவ்வொரு தளமும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
கட்டிடத்தின் மையப்பகுதியில் 'சபா' என்ற பிரம்மாண்டமான சமூகக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இது ஊழியர்கள் ஒன்றுகூடி ஆலோசனைக் கூட்டங்களை நடாத்துவதற்கும் கருத்துப் பரிமாற்றம் செய்வதற்கும் பயன்படுத்தப்படவுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வையற்ற ஊழியர்கள் இலகுவாக இயங்கும் வகையில் தொடு உணர்வுத் தளங்கள் (Tactile Flooring) மற்றும் பிரெய்லி (Braille) வழிகாட்டிகள் உள்ளடங்கலாகப் பல சிறப்பு உள்கட்டமைப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
அதிகளவு இயற்கை ஒளியை அனுமதிக்கும் வகையில் இக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. மேலும், பெங்களூரின் "பூங்கா நகரம்" என்ற பெருமையைப் பிரதிபலிக்கும் வகையில் மரங்கள் மற்றும் செடிகள் வளர்க்கப்பட்டு, நடைப்பயிற்சி மற்றும் ஓட்டப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
'அரண்யா' செயற்கைக் காடு: வெளிப்புறச் சாலைகளின் போக்குவரத்துச் சத்தத்தைக் குறைத்து, அமைதியான பணிச் சூழலை வழங்குவதற்காக 'அரண்யா' என்ற செயற்கைக் காடு வளாகத்தினுள் உருவாக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: நூற்றுக்கணக்கான லீற்றர் மழைநீரைச் சேகரிக்கும் வகையில் நவீன மழைநீர் சேகரிப்புத் திட்டமும் இதில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் வெள்ள முன்னறிவிப்பு, காசநோய் கண்டறிதல் மற்றும் 'கூகுள் பே' (Google Pay) போன்ற சேவைகள் வழியாகக் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சிக்குக் கூகுள் நிறுவனம் கணிசமான பங்களிப்பை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM