இலங்கைத் தமிழரான கம்சி குணரட்ணம் நோர்வே போக்குவரத்து அமைச்சராக பதவியேற்பு

12 Sep, 2026 | 12:26 PM
image

இலங்கை வம்சாவழியைச் சேர்ந்தவரும் நோர்வேயின் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தருமான கம்சி குணரட்ணம், அந்நாட்டின் புதிய போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நோர்வே மன்னர் தலைமையில் நடைபெற்ற அரசாங்க சபைக் கூட்டத்தில், 2026 செப்டெம்பர் 11ஆம் திகதி கம்சி குணரட்ணம் போக்குவரத்து அமைச்சராக உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டதாக நோர்வே அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் நோர்வே அரசியலில் முக்கியமான அமைச்சுப் பதவியை வகிக்கும் தமிழ்ப் பின்னணியைக் கொண்ட அரசியல்வாதியாக கம்சி குணரட்ணம் உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இளம் வயதிலேயே அரசியலில் ஈடுபட்ட கம்சி குணரட்ணம், தொழிலாளர் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி படிப்படியாக பல்வேறு அரசியல் பொறுப்புகளை வகித்து முன்னேறியுள்ளார். 19 வயதில் ஒஸ்லோ மாநகர சபைக்கு தெரிவான அவர், பின்னர் தேசிய அரசியலிலும் முக்கிய இடத்தைப் பெற்றார்.

தற்போது நோர்வே அரசாங்கத்தில் போக்குவரத்து அமைச்சராக பொறுப்பேற்றுள்ள கம்சி குணரட்ணம், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து, அஞ்சல் சேவைகள் உள்ளிட்ட துறைகள் தொடர்பான கொள்கைகளுக்கு பொறுப்பானவராக செயற்படவுள்ளார்.

கம்சியின் இந்த உயர்வு, அவரது அரசியல் பயணத்தில் முக்கியமான புதிய கட்டமாகவும், நோர்வே வாழ் தமிழர்கள் உள்ளிட்ட உலகத் தமிழர்களுக்கு பெருமைக்குரிய நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது.

நோர்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரே தலைமையிலான தற்போதைய அரசாங்கம் தொழிலாளர் கட்சி உறுப்பினர்களைக் கொண்டதாக அமைந்துள்ள நிலையில், கம்சி குணரட்ணம் போக்குவரத்து அமைச்சராக இடம்பெற்றுள்ளார்.

இதேவேளை, புதிய அமைச்சருக்கான மாநிலச் செயலாளர்களாக Abel Cecilie Knibe Kroglund மற்றும் Jakob Vorren ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் நோர்வே அரசாங்கம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரும் போராட்டத்திற்கு முன்னரே ‘கரப்பான்பூச்சி’ இயக்கத்தினரை...

2026-10-10 15:22:21
news-image

ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய...

2026-10-10 11:48:10
news-image

டில்லியைத் தொடர்ந்து சென்னையிலும் போராட்டம் :...

2026-10-10 10:56:17
news-image

தான்சானியாவில் கோர விபத்து : லொறியுடன்...

2026-10-10 13:38:07
news-image

நவி பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு...

2026-10-10 10:32:12
news-image

பனாமாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

2026-10-10 08:22:28
news-image

தமிழகத்தின் இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் தமிழக...

2026-10-09 16:41:49
news-image

ரியாத் விமான நிலையத் தாக்குதலில் விமானி...

2026-10-09 17:36:33
news-image

அமைதிக்கான நோபல் பரிசு நவநீதம்பிள்ளைக்கு!

2026-10-09 15:14:41
news-image

தமிழக இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக்...

2026-10-09 13:22:24
news-image

உக்ரைனில் பயணிகள் பேருந்துகள் மீது ரஷ்யா...

2026-10-09 12:01:19
news-image

அமெரிக்காவில் மைக்ரோசொப்ட் உட்பட தொழில்நுட்ப நிறுவனங்களின்...

2026-10-09 12:19:33