‘வைகைப்புயல்’ என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நகைச்சுவை நடிகர் வடிவேலு இன்று தனது 67ஆவது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.
மதுரையைச் சேர்ந்த இவர், திரைப்படங்களில் தனது தனித்துவமான உடல்மொழி, பேச்சு, முகபாவனைகள் மற்றும் நகைச்சுவை பாணியின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து வடிவேலு நடித்த நகைச்சுவைக் காட்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
‘கிழக்கு சீமையிலே’, ‘காலம் மாறிப் போச்சு’, ‘வெற்றிக் கொடி கட்டு’, ‘தவசி’, ‘சந்திரமுகி’, ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’, ‘போக்கிரி’, ‘மருதமலை’, ‘கதவராயன்’ உள்ளிட்ட பல திரைப்படங்கள் அவரது நகைச்சுவை நடிப்புக்காக குறிப்பிடத்தக்கவை.
நகைச்சுவை நடிகராக மட்டுமன்றி கதாநாயகனாகவும் வடிவேலு தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
2006ஆம் ஆண்டு வெளியான ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக அமைந்தது. வரலாற்றுப் பின்னணியில் உருவாக்கப்பட்ட இந்த நகைச்சுவை திரைப்படத்தில் அவர் ஏற்ற இரட்டை வேடங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.
அதனைத் தொடர்ந்து ‘இந்திரலோகத்தில் நான் அழகப்பன்’, ‘தெனாலிராமன்’, ‘எலி’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் கதாநாயகனாக நடித்தார். பின்னர் மீண்டும் துணை மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்தார்.
நடிப்புக்கு அப்பால் வடிவேலு அவ்வப்போது திரைப்படப் பாடல்களையும் பாடியுள்ளார். ‘எல்லாமே என் ராசாதான்’, ‘காலம் மாறிப் போச்சு’, ‘வேல்’, ‘இந்திரலோகத்தில் நான் அழகப்பன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களுக்காக அவர் பாடிய பாடல்களும் இடம்பெற்றுள்ளன.
பல தசாப்தங்களாக தமிழ் சினிமாவில் பயணித்து வரும் வடிவேலு, தனது நடிப்பின் மூலம் பல தலைமுறை ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM