இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை (12) 04:23 மணியளவில் பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
பூமியதிர்ச்சியானது 5.9 முதல் 6.5 ரிச்டர் அளவில் ஆகப் பதிவாகியுள்ளதுடன், ஆயிரம் தீவுகளுக்குச் தென்கிழக்கே மையம் கொண்டிருந்தது.
பூமியதிர்ச்சியால் சுனாமி பேரலைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை என இந்தோனேசிய வளிமண்டலவியல், காலநிலை மற்றும் புவிப்பௌதிகவியல் முகவாண்மை உறுதிப்படுத்தியுள்ளது.
இச் சம்பவத்தால் இதுவரை உயிரிழப்புகளோ அல்லது கட்டட சேதங்களோ ஏற்பட்டதாக எந்தவித அதிகாரப்பூர்வத் தகவலும் வெளியாகவில்லை.
ஜகார்த்தா, பாந்தென், மேற்கு ஜாவா மற்றும் சுமாத்ராவின் பாலம்பாங், பெங்குலு, லம்பங் உள்ளிட்ட பல பகுதிகளில் பூமியதிர்ச்சியின் அதிர்வுகள் வலுவாக உணரப்பட்டுள்ளன.
தொடர் பூமியதிர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM