பிலிப்பைன்ஸில் படகு தீப்பற்றி எரிந்து விபத்து : பலி எண்ணிக்கை 35 ஆக உயர்வு!

Published By: M.Priyanka

12 Sep, 2026 | 10:36 AM
image

பிலிப்பைன்ஸில்  தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளான பயணிகள் படகின் இடிபாடுகளிலிருந்து மேலும் 30 உடல்களை பிலிப்பைன்ஸ் கடலோரக் பொலிஸ் படையினர் மீட்டதையடுத்து, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

தலைநகர் மணிலாவிலிருந்து பிரபல சுற்றுலாத் தலமான கோரோன் (Coron) நோக்கிச் சென்று கொண்டிருந்த 'எம்.வி. ஜூன் ஆஸ்டர்' (MV June Aster) என்ற படகில் கடந்த புதன்கிழமை (10) தீ விபத்து ஏற்பட்டதுடன் அந்தப் படகில் 130-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.

விபத்திலிருந்து 43 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காணாமல் போன 50-க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருவதாக  சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

படகில் இன்னும் பல உடல்கள் உள்ளதாகவும், நச்சுப் புகை மற்றும் அதிக வெப்பம் காரணமாக வெள்ளிக்கிழமை வரை படகிற்குள் நுழைய முடியவில்லை என்றும் அந்நாட்டு கடலோரக் பொலிஸ் படை தெரிவித்துள்ளது. 

22 மணி நேரப் பயணமாகச் சென்ற அந்தப் படகின் தூங்கும் பகுதியிலிருந்தே பெரும்பாலான உடல்கள் மீட்கப்பட்டதாகக் அந்நாட்டு கடலோரக் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

விபத்துக்கான காரணம் குறித்து பிலிப்பைன்ஸ்  கடல்சார் ஆணைக்குழு  தீவிர விசாரணை நடத்தி வருகிறது. 2002-இல் கட்டப்பட்ட இந்தப் படகு முறையான பாதுகாப்பு சான்றிதழ்களைக் கொண்டிருந்தபோதிலும், பயணியர் பட்டியல் விவரங்கள், சரக்கு ஏற்றிய முறை மற்றும் ஊழியர்களின் அவசரகால மீட்பு நடவடிக்கை ஆகியவற்றில் ஏற்பட்ட குறைபாடுகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரும் போராட்டத்திற்கு முன்னரே ‘கரப்பான்பூச்சி’ இயக்கத்தினரை...

2026-10-10 15:22:21
news-image

ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய...

2026-10-10 11:48:10
news-image

டில்லியைத் தொடர்ந்து சென்னையிலும் போராட்டம் :...

2026-10-10 10:56:17
news-image

தான்சானியாவில் கோர விபத்து : லொறியுடன்...

2026-10-10 13:38:07
news-image

நவி பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு...

2026-10-10 10:32:12
news-image

பனாமாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

2026-10-10 08:22:28
news-image

தமிழகத்தின் இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் தமிழக...

2026-10-09 16:41:49
news-image

ரியாத் விமான நிலையத் தாக்குதலில் விமானி...

2026-10-09 17:36:33
news-image

அமைதிக்கான நோபல் பரிசு நவநீதம்பிள்ளைக்கு!

2026-10-09 15:14:41
news-image

தமிழக இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக்...

2026-10-09 13:22:24
news-image

உக்ரைனில் பயணிகள் பேருந்துகள் மீது ரஷ்யா...

2026-10-09 12:01:19
news-image

அமெரிக்காவில் மைக்ரோசொப்ட் உட்பட தொழில்நுட்ப நிறுவனங்களின்...

2026-10-09 12:19:33