மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் ஷிரான் பாசிக்கின் தந்தை கைது

Published By: Vishnu

12 Sep, 2026 | 06:07 AM
image

சர்வதேச அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்  என அறியப்படும்  மொஹம்மட் ஷிரான் பாசிக்கின் தந்தை,  கருப்பு பணச் சுத்திகரிப்பு குற்றச்சாட்டின் கீழ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாட்டில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு, சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிப்பதற்காக வெளிநாடு சென்று தலைமறைவாகியிருந்த நிலையில், அண்மையில் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட சர்வதேச அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் என  அறியப்படும் மொஹம்மட் ஷிரான் பாசிக் தற்போது மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கம்பஹா பகுதியில்  அமைந்துள்ள ஆடம்பர வீடமைப்புத் தொகுதியொன்றில் சுமார் 3 கோடி ரூபா பெறுமதியான வீடொன்றை ஷிரான் பாசிக் கொள்வனவு செய்துள்ளதாகவும், அவ்வீடு அவரது தந்தையின் பெயரிலேயே  கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும்  விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இது தொடர்பில்  வாக்குமூலம் அளிப்பதற்காக ஷிரான் பாசிக்கின் தந்தையை நேற்று  மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கமைய விசாரணைக்காக வருகை தந்த அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையை  அடுத்து, பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறைச்சாலைச் சட்டங்கள் மற்றும் விதிகளைப் புதுப்பிக்க...

2026-10-10 16:22:00
news-image

மெகசின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷிரந்தி ராஜபக்‌ஷவை...

2026-10-10 15:53:19
news-image

பின்னோக்கிச் சென்ற பேருந்து மோதி மோட்டார்...

2026-10-10 15:46:57
news-image

மெட்ரோ பேருந்து மீது மோதிய சொகுசு...

2026-10-10 15:26:47
news-image

யக்கல - கிரிக்கித்தமுல்ல பகுதியில் கசிப்புடன்...

2026-10-10 16:39:25
news-image

சவூதி அரேபிய விமான நிலையங்கள் மீது...

2026-10-10 15:03:27
news-image

மாத்தளையில் பொலிஸார் மீது தாக்குதல் :...

2026-10-10 15:06:34
news-image

யாழில் நீண்டகாலமாக மணல் கடத்தலில் ஈடுபட்டவர்...

2026-10-10 14:41:50
news-image

திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தின் நம்பிக்கைப் பொறுப்பு...

2026-10-10 16:26:27
news-image

அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு சவூதியிடம் சனத்...

2026-10-10 14:26:01
news-image

2027இல் முக்கிய இராஜதந்திர மற்றும் பொருளாதார...

2026-10-10 14:54:47
news-image

போதைப்பொருள் கடத்தல் சந்தேக நபரின் 3.5...

2026-10-10 14:30:02