பசில் ராஜபக்ச தலைமையில் உதயமாகியிருக்கும் இலங்கை மக்கள் முன்னணி கட்சியில், காலஞ்சென்ற சோமவன்ச அமரசிங்கவின் கட்சி இணைந்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்களுள் ஒருவரான சோமவன்ச அமரசிங்க, கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி நிலையையடுத்து அதிலிருந்து விலகி புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்தார். ‘ஜனதா சேவக பக்சய’ (மக்கள் சேவைக் கட்சி) என்ற பெயரிலான இந்தக் கட்சி, அவரது மரணத்தையடுத்து தொய்வடைந்திருந்தது.

இந்நிலையில், பசில் ராஜபக்ச தலைமையில், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உட்படப் பல முக்கியஸ்தர்களைக் கொண்டு உருவாகியிருக்கும் இலங்கை பொதுமக்கள் முன்னணி என்ற கட்சியுடன் ஜனதா சேவக பக்சய இணைந்துகொண்டது.

இதற்கான பேச்சுவார்த்தைகள் திருப்தியாக நிறைவடைந்ததையடுத்தே இந்த இணைப்பு இடம்பெற்றுள்ளதாக பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.