பண்டாரவளை – ஹப்புத்தளை பிரதான வீதியில், கொலத்தென்ன ரயில்வே கடவைக்கு அருகில் வெள்ளிக்கிழமை (11.09.2026) மாலை சுமார் 4.45 மணியளவில் லொரி ஒன்று ரயில் தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பிலிருந்து பண்டாரவளை நோக்கி ஓடுகளை ஏற்றிச் சென்ற LK 8548 என்ற இலக்கத்தைக் கொண்ட லாரியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

லொரியின் பிரேக் செயலிழந்ததன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் லொரி ஓட்டுநர் லேசான காயங்களுக்கு உள்ளாகி பண்டாரவளை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து காரணமாக ரயில் தண்டவாளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், விபத்துக்குள்ளான லாரியை தண்டவாளத்திலிருந்து அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக ஓஹியாவிலிருந்து பதுளை நோக்கிப் பயணிக்கும் புகையிரதம் தாமதமாகலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM