(நெவில் அன்தனி)
கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (11) மாலை நடைபெற்ற சுப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டியில் வென்னப்புவை நியூ யங்ஸ் அணியை 4 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் டிபெண்டர்ஸ் எவ்சி வெற்றிகொண்டது.
ஆனால், இந்த வெற்றி இலகுவாக அமைந்தது என்று கூறமுடியாது.
போட்டியின் முதலாவது பகுதியில் இரண்டு அணியினரும் கடும் வெய்யில் காரணமாக சோர்வுடன் விளையாடியதை அவதானிக்க முடிந்தது.
இதனிடையே இரண்டு அணியினருக்கும் கோல் போடுவதற்கு கிடைத்த சில வாய்ப்புகள் கோல் வாயிலில் வைத்து தவறவிடப்பட்டது.

இடைவேளைவரை இரண்டு அணிகளும் கோல் போட்டிருக்கவில்லை.
இடைவேளைக்குப் பின்னர் மைதானத்தின் பிரதான பார்வையாளர் கூடம் சூரியனை மறைக்க, மைதானத்தில் வெய்யில் குறைந் து நிழல் படரத் தொடங்கியது.
அதன் பின்னர் போட்டியில் சற்று விறுவிறுப்பை காணக்கூடியதாக இருந்தது.
குறிப்பாக டிபெண்டர்ஸ் அணியினர் கோல் போடுவதற்கு பல தடவைகள் முயற்சித்தனர். மூன்று சந்தர்ப்பங்களில் நியூ யங்ஸ் கோல் காப்பாளர் மாத்திரமே கோல் வாயிலில் இருந்த போதிலும் டிபெண்டர்ஸ் அணியினால் கோல் போட முடியாமல் போனது.

நியூ யங்ஸ் கோல்காப்பாளர் சானக்க சந்தருவன் மிக அற்புதமாக செயற்பட்டு நிச்சயமான கோல்களைத் தடுத்து நிறுத்தி பெரும் பாராட்டைப் பெற்றார்.
எனினும், போட்டியின் 66ஆவது நிமிடத்தில் இருந்து டிபெண்டர்ஸ் அணியினர் 16 நிமட இடைவெளியில் 4 கோல்களைப் புகுத்தி வெற்றியீட்டினர்.
நியூ யங்ஸின் தடுப்பாட்ட வரிசையில் (defence line) ஏற்பட்ட தவறுகளே அதன் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
நியூ யங்ஸ் பின்கள வீரர்களின் தவறான ஓவ்சைட் கணிப்பை நன்கு பயன்டுத்திக்கொண்ட டிபெண்டர்ஸ் வீரர் ஷிவான் கலீல் 66ஆவது நிமிடத்தில் மிகவும் சாதுரியமாக பந்தை கோலினுள் புகுத்தினார்.
மூன்று நிமிடங்கள் கழித்து மீண்டும் பின்களத்தில் ஏற்பட்ட தவறைப் பயன்படுத்தி ஆப்தீன் பயாஸ் இரண்டாவது கோலைப் போட்டார்.

அதுவரை தாக்குப்பிடித்து விளையாடிய நியூ யங்ஸ் வீரர்கள் மனம் நொந்து துவண்டு போயினர். அதேவேளை கோல்காப்பாளரும் வேண்டாவெறுப்புடன் பந்தை தடுத்தவாறு இருந்தார்.
போட்டியின் 79ஆவது நிமிடத்தில் சௌந்தரராஜன் அரவின்ராஜ் இலகுவாக கோல் போட்டு டிபெண்டர்ஸ் அணியின் கோல் எண்ணிக்கையை 3ஆக உயர்த்தினார்.
மேலும் 3 நிமிடங்கள் கழித்து டிபெண்டர்ஸ் வீரர் சமோத் குமார் தனது அணியின் நான்காவது கோலை புகுத்தினார்.
இந்தப் போட்டியுடன் டிபெண்டர்ஸ் எவ்சி அணியும் வென்னப்புவை நியூ யங்ஸ் அணியும் தத்தமது சுப்பர் லீக் முதல் சுற்று போட்டிகளை நிறைவு செய்துகொண்டன.

டிபெண்டர்ஸ் அணி 2 வெற்றிகள், ஒரு வெற்றிதோல்வியற்ற முடிவு, 6 தோல்விகள் என்ற பெறுபேறுகளுடன் 7 புள்ளிகளைப் பெற்று அணிகள் நிலையில் 8ஆவது இடத்தை உறுதிசெய்துகொண்டது.
நியூ யங்ஸ் அணி ஒரு வெற்றி, 2 வெற்றிதோல்வியற்ற முடிவுகள், 6 தோல்விகள் என்ற பெறுபேறுகளுடன் 5 புள்ளிகளைப் பெற்று 9ஆம் இடத்தில் உள்ளது.
இந்த இரண்டு அணிகளும், இதுவரை ஒரு புள்ளியைத்தானும் பெறாமல் கடைசி இடத்தில் இருக்கும் ரட்னம் அணியும் தரமிறக்கலுக்கான சுற்றில் விளையாடவுள்ளன.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM