இந்தியாவை இறுதிப் போட்டியில் சந்திப்பது இலங்கையா? பாகிஸ்தானா? இரண்டாவது அரை இறுதி இன்று

Published By: Vishnu

11 Sep, 2026 | 07:03 PM
image

(நெவில் அன்தனி)

துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் முன்னாள் சம்பயன் இந்தியாவை சந்திக்கப்போவது நடப்பு சம்பியன் இலங்கையா அல்லது பாகிஸ்தானா என்பதைத் தீர்மானிக்கும் இரண்டாவது அரை இறுதிப் போட்டி இன்று இரவு நடைபெறவுள்ளது.

மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் அரங்கில் இலங்கையும் பாகிஸ்தானும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட 24 போட்டிகளில் பாகிஸ்தான் 12 - 11 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது. ஒரு போட்டியில் முடிவு கிட்டவில்லை.

இந்த முடிவுகளுக்கு அமைய இன்றைய போட்டி இரண்டு அணிகளுக்கும் இலகுவாக அமையும் என எதிர்பார்க்கமுடியாது.

எவ்வாறாயினும் இந்த சுற்றுப் போட்டியில் தோல்வி அடையாமல் இருக்கும் சமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுவதில் தவறில்லை. ஆனால், பாகிஸ்தான் இந்தப் போட்டியை இலகுவில் நழுவ விடாது என்ற கருத்தும் நிலவத்தான் செய்கிறது.

தற்போது நடைபெற்றுவரும் மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பி குழுவில் ஐக்கிய அரபு இராச்சியத்தை 9 விக்கெட்களாலும் இந்தோனேசியாவை 75 ஓட்டங்களாலும் பங்களாதேஷை 4 விக்கெட்களாலும் இலங்கை வெற்றிகொண்டு அரை இறுதிக்கு முன்னேறியது.

மறுபுறத்தில் ஏ குழுவில் தாய்லாந்தை 35 ஓட்டங்களால் வெற்றிகொண்ட பாகிஸ்தான், இரண்டாவது போட்டியில் இந்தியாவிடம் 7 விக்கெட்களால் தோல்வி அடைந்தது.

எனினும் ஹொங்கொங் உடனான தனது கடைசி லீக் போட்டியில் 72 ஓட்டங்களால் வெற்றியீட்டியதன் மூலம் அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

இரண்டு அணிகளினதும் பெறுபேறுகள் எத்தகையதாக இருந்தாலும்  இன்றைய போட்டியில் எந்த அணி சகலதுறைகளிலும் திறமையாக விளையாடுகிறதோ அந்த அணியே வெற்றி பெற்று   இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிபெண்டர்ஸ் வீரர் ஒருவர் அநாவசியமாக மஞ்சள்...

2026-10-09 23:39:40
news-image

லஹிருவின் அரைச் சதத்தை பர்ஹான், சதாகத்...

2026-10-09 23:32:54
news-image

துடுப்பாட்டத்தில் லஹிரு அபாரம்;  பாகிஸ்தானுக்கு 183...

2026-10-09 20:33:44
news-image

பாகிஸ்தானுடனான முதலாவது ரி20இல் இலங்கை முதலில்...

2026-10-09 18:21:16
news-image

நிலைமாறுதல் கட்டத்தில் உள்ள இலங்கையை ரி20...

2026-10-09 16:17:12
news-image

டிபெண்டர்ஸ் - நியூ யங்ஸ் போட்டியுடன்...

2026-10-09 15:16:43
news-image

பெடரேஷன் கிண்ண கால்பந்தாட்டத்தில் 25 பயிற்சியகங்களைச்...

2026-10-08 21:44:25
news-image

குசல் மெண்டிஸ் இலங்கை டெஸ்ட் அணியின்...

2026-10-08 16:20:42
news-image

தனஞ்சய டி சில்வா இலங்கை டெஸ்ட்...

2026-10-08 12:37:22
news-image

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள...

2026-10-07 06:36:13
news-image

மொரிஷியஸை 3 - 2 என...

2026-10-06 03:51:43
news-image

இலங்கை ஒருநாள் கிரிக்கெட் குழாத்தில் மீண்டும்...

2026-10-05 18:56:28