(எம்.எப்.எம்.பஸீர்)
பொதுநலவாய மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டிக்கான தெரிவுப் பட்டியலிலிருந்து தாம் நீக்கப்பட்டமையால் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து மெய்வல்லுநர் வீரர் ஜூலியன் விஜேசிங்க தாக்கல் செய்த மனுவை வரும் டிசம்பர் 11 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐக்கிய இராச்சியத்தில் நடைபெறவிருந்த பொதுநலவாய மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டிக்காகத் தாம் தெரிவு செய்யப்பட்டிருந்ததாகவும், பின்னர் எவ்வித நியாயமான காரணமுமின்றி முன்னறிவித்தலுமின்றி அப்பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் மூலம் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், எதிர்காலத்தில் விளையாட்டு வீரர்கள் இவ்வாறான அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதைத் தவிர்க்கும் வகையில், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்கான வீரர்களைத் தெரிவு செய்வதில் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய தேசிய வழிகாட்டல் முறைமையையொன்றை உருவாக்க உத்தரவிடுமாறும் கோரியுள்ளார்.
ஜனக் சில்வா மற்றும் மஹிந்த சமயவர்த்தன ஆகிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அடங்கிய அமர்வு முன்னிலையில் இம்மனு பரிசீலிக்கப்பட்டது. இம்மனுவில் விளையாட்டுத்துறை அமைச்சர், இலங்கை மெய்வல்லுநர் சங்கம் உள்ளிட்ட பலர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர். மனுதாரர் சார்பில் சட்டத்தரணி வியங்க ரொட்ரிகோ மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி காமினி பெரேரா ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM