22ஆவது அரசியலமைப்பு திருத்தம் : எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் கட்சிகள் இடையே முக்கிய கலந்துரையாடல்!

11 Sep, 2026 | 07:45 PM
image

(நமது நிருபர்)

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் விவாதித்து நிறைவேற்றுவதில் எதிர்க்கட்சிகள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் எவ்வாறு ஒருங்கிணைந்து செயற்படவேண்டும் என்பது குறித்த முக்கிய கலந்துரையாடல் இன்று (11) நடைபெற்றுள்ளது.

சுதந்திர செயற்பாட்டு மையம் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் பிரதிநிதிகள் குழுவினரிடையே, ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பாராளுமன்றத்தில் 22ஆவது திருத்தச் சட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஏனைய அரசியல் பிரிவுகளும் ஒன்றிணைந்து செயல்படவேண்டியதன் அவசியம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. 

மேலும், இது தொடர்பாக அடுத்த வாரம் எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளை உள்ளடக்கிய கூட்டுச் சந்திப்பு ஒன்றை நடத்துவதற்கும், அதனைத் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை இணைந்து முன்னெடுப்பதன் முக்கியத்துவம் குறித்தும் இரு தரப்பினரும் இதன்போது இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர்.

இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான சுஜீவ சேனசிங்க, டொக்டர் கவிந்த ஹேஷான் ஜயவர்தன, ஜெ.சி. அலவத்துவல, சுஜித் சஞ்ஜய பெரேரா மற்றும் சட்டத்தரணி சீரல் லக்திலக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

சுதந்திர செயற்பாட்டு மையத்தின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பிரேமநாத் தொலவத்த, சமன் ரத்னப்பிரிய உள்ளிட்ட பல பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் 316 மாணவர்களுக்கு இலவச...

2026-10-16 17:28:03
news-image

மனைவியின் சகோதரியான 16 வயது சிறுமியை...

2026-10-16 18:19:02
news-image

சிறைச்சாலைகளுக்குள் தேரர்கள் அணியும் ஆடை தொடர்பில்...

2026-10-16 17:24:04
news-image

பாராளுமன்றம் ஒக். 20 முதல் 23...

2026-10-16 18:00:30
news-image

யாழ். மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் வசமிருந்த...

2026-10-16 17:45:46
news-image

சுங்கத் திணைக்கள தலைமையகத்திற்கு அருகில் சட்டவிரோத...

2026-10-16 17:22:16
news-image

யானை - மனித மோதல் ;...

2026-10-16 18:21:55
news-image

கொழும்பு துறைமுக நகரத்தின் செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை...

2026-10-16 16:34:51
news-image

15 பில்லியன் டொலர் டிஜிட்டல் பொருளாதாரம்:...

2026-10-16 16:50:24
news-image

தமிழ் அரசியல் கைதிகள் தண்டனைக் காலத்தை...

2026-10-16 16:18:09
news-image

'சிரிலிய சவிய' நிதி மோசடி வழக்கு:...

2026-10-16 17:00:45
news-image

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் திருத்தப்பட்ட...

2026-10-16 16:16:43