ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தாம் போட்டியிடுவது சந்தேகமே என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தீபாவளி தினமான இன்று (18) தெஹிவளை விஷ்ணு கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்திய மகிந்த ராஜபக்சவிடம், கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்டத்தின் கீழ், நுவரெலியாவில் நான்கு புதிய பிரதேச சபைகளை நிறுவ மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, அம்பகமுவ பிரதேச சபை மூன்றாகப் பிரிக்கப்பட்டு அம்பகமுவ, நோர்வூட் மற்றும் மஸ்கெலியா பிரதேச சபை என்று பெயரிடப்படவுள்ளது.

மேலும், அக்கரப்பத்தனை பிரதேச சபை இரண்டாகப் பிரிக்கப்பட்டு அக்கரப்பத்தனை மற்றும் கொட்டகலை பிரதேச சபைகள் என்று பெயரிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல்கள் எதிர்வரும் வாரம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.