'வேதாளம்' படத்தை முடித்தவுடன் முழங்கால் மற்றும் தோள்பட்டையில்சத்திர சிகிச்சை செய்து கொண்ட அஜித், தற்போது விரைவாக குணமாகி வருவதாகவும், எதிர்வரும் மே மாதம் ஆரம்பமாகவுள்ள அஜித்தின் 57 படத்திற்காக அவர் விரைவில் தயாராகிவிடுவார் என்றும் கூறப்படுகிறது.

மேலும், அறுவை சிகிச்சைக்கு பின்னர் சின்ன சின்ன உடற்பயிற்சிகள் செய்தும், உணவுக்கட்டுப்பாட்டை கடைபிடித்தும் வரும் அஜித் வெகுவிரைவில் பூரண குணமாகிவிடுவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அஜித் தனது குடும்பத்தினர்களுடன் லண்டன் சென்று இரண்டு மாதம் முழு ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளதாகவும், விரைவில் அவர் சென்னையில் இருந்து லண்டனுக்கு செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

லண்டனில் இருந்து பூரண குணமாகி சென்னை திரும்பியவுடன் 'சிறுத்தை' சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், அஜித் லண்டனில் இருந்து திரும்பி வருவதற்குள் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.