ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்த 'இம்மார்ட்டல்' படக்குழு

Published By: Digital Desk 2

11 Sep, 2026 | 05:47 PM
image

இசையமைப்பாளர் நட்சத்திர நடிகர் என்ற இரண்டு துறையிலும் முத்திரை பதித்துவரும் முன்னணி கலைஞரான ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான 'இம்மார்ட்டல்' திரைப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று, வசூல் ரீதியான வெற்றியை தொட்டிருக்கிறது. இதனால் உற்சாகமடைந்த படக்குழு படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் படக்குழுவினர் பங்குபற்றினர். இந்நிகழ்வில் இப்படத்தை தமிழகம் முழுவதும் பட மாளிகையில் வெளியிட்ட விநியோகத்தர் சக்திவேலன், இயக்குநர் மாரியப்பன் சின்னா,  இசையமைப்பாளர் சாம் சி எஸ், நடிகர் ஜீ.வி. பிரகாஷ் குமார் ஆகியோருக்கு படத்தின் தயாரிப்பாளர் விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை பரிசாக வழங்கி சிறப்பித்தார்.

இதனைத் தொடர்ந்து படத்தின் நாயகனான ஜீ.வி. பிரகாஷ் குமாருக்கு துவி சக்கரம் வாகனம் ஒன்றையும் தயாரிப்பாளர் பரிசாக வழங்கினார்.

இந்நிகழ்வில் பங்குபற்றி ஜீ.வி. பிரகாஷ் குமார் பேசுகையில், ''வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான திரைகளில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களின் பேராதரவை உடனடியாக பெற்றதால்.. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெரிய திரைகளிலும் கூடுதல் காட்சிகளாகவும் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றது.

இத்திரைப்படத்திற்கான வரவேற்பு இணையத்தில் ட்ரெண்டிங்கில் வந்தவுடன் தயாரிப்பாளரின் முகத்தில் மகிழ்ச்சியை காண முடிந்தது. இந்தப் படத்தில் கிறாபிக்ஸ் காட்சிகளுக்காக ஓராண்டு வரை படக் குழு காத்திருந்து நேர்த்தியாக உழைத்து, எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் உருவாக்கியதற்கும், இதற்காக படக்குழுவினரின் பொறுமை மற்றும் நம்பிக்கைக்கும் ரசிகர்கள் வெற்றியை பரிசாக அளித்துள்ளனர்'' என்றார்.

ரத்த காட்டேரி- ஃபேண்டஸி திரில்லர் அம்சங்களுடன் வெளியாகி இருப்பதால் இத்திரைப்படம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.இத்திரைப்படம் தொடர்ந்து வெற்றிகரமாக படமாளிகைகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் மணிகண்டன் வெளியிட்ட 'இறுதிப் பக்கம்...

2026-10-10 17:17:22
news-image

“மக்கள் செல்வன்” விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-10-10 17:15:01
news-image

ராம் நிஷாந்த் நடிக்கும் 'சுடர்' படத்தின்...

2026-10-10 17:00:54
news-image

சரண் நடிக்கும் 'எனிமி ஒஃப் தி...

2026-10-10 16:59:39
news-image

எம்.எஸ். பாஸ்கர் நடிக்கும் 'விடியும் காத்திரு'...

2026-10-10 16:44:20
news-image

நவீன் முரளிதர் நடிக்கும் 'காட்டேஜ்' படத்தின்...

2026-10-10 16:43:08
news-image

E 1 - திரைப்பட விமர்சனம்

2026-10-09 15:17:30
news-image

ஆல் பாஸ் - திரைப்பட விமர்சனம்

2026-10-09 15:16:52
news-image

நடிகர் வெற்றி நடிக்கும் 'பரிட்' திரைப்படத்தின்...

2026-10-09 14:30:24
news-image

விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'ரண பலி'...

2026-10-09 14:27:08
news-image

சித்தி இத்னானி, தேவதர்ஷினி பேய்களாக நடிக்கும்...

2026-10-09 14:11:12
news-image

சூர்யா நடிக்கும் 'சீன்' படத்தின் முதல்...

2026-10-09 14:09:39