ஒக்டோபரில் வெளியாகும் பொலிவுட் நடிகர் அஜய் தேவ்கனின் 'த்ரிஷ்யம் தி கன்குளுஷன்'

Published By: Digital Desk 2

11 Sep, 2026 | 05:44 PM
image

பொலிவுட் திரையுலக நட்சத்திர நடிகரான அஜய் தேவ்கன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'த்ரிஷ்யம் தி கன்குளுஷன்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் அபிஷேக் பதக் இயக்கத்தில் உருவாகியுள்ள 'த்ரிஷ்யம் தி கன்குளுஷன்' திரைப்படத்தில் அஜய் தேவ்கன், தபு, ஸ்ரியா சரண், ரஜத் கபூர், ஜெய்தீப் அஹ்லாவத், மிருணாள் ஜாதவ், பிரகாஷ் ராஜ், இஷிதா தத்தா, கமலேஷ் சாவந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

சுதீர் குமார் சவுத்ரி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரவி பஸ்ரூர், ரோசக் கோலி, கர்மா ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.

ஃபேமிலி திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்டார் ஸ்டுடியோ 18 ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து இருக்கிறது.

'த்ரிஷ்யம் 2 'படத்தை தொடர்ந்து அடுத்த பாகமாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டத்தில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு அற்புதமான திரில்லர் தருணங்கள் வழங்குவதை உறுதி செய்திருப்பதால்.. படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

மேலும் இந்த திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் ஹிந்தி மொழியில் வெளியாகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் மணிகண்டன் வெளியிட்ட 'இறுதிப் பக்கம்...

2026-10-10 17:17:22
news-image

“மக்கள் செல்வன்” விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-10-10 17:15:01
news-image

ராம் நிஷாந்த் நடிக்கும் 'சுடர்' படத்தின்...

2026-10-10 17:00:54
news-image

சரண் நடிக்கும் 'எனிமி ஒஃப் தி...

2026-10-10 16:59:39
news-image

எம்.எஸ். பாஸ்கர் நடிக்கும் 'விடியும் காத்திரு'...

2026-10-10 16:44:20
news-image

நவீன் முரளிதர் நடிக்கும் 'காட்டேஜ்' படத்தின்...

2026-10-10 16:43:08
news-image

E 1 - திரைப்பட விமர்சனம்

2026-10-09 15:17:30
news-image

ஆல் பாஸ் - திரைப்பட விமர்சனம்

2026-10-09 15:16:52
news-image

நடிகர் வெற்றி நடிக்கும் 'பரிட்' திரைப்படத்தின்...

2026-10-09 14:30:24
news-image

விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'ரண பலி'...

2026-10-09 14:27:08
news-image

சித்தி இத்னானி, தேவதர்ஷினி பேய்களாக நடிக்கும்...

2026-10-09 14:11:12
news-image

சூர்யா நடிக்கும் 'சீன்' படத்தின் முதல்...

2026-10-09 14:09:39