கிஷன் தாஸ் நடிக்கும் 'சி யூ' படத்தின் முதல் பாடல் வெளியீடு

Published By: Digital Desk 2

11 Sep, 2026 | 05:42 PM
image

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகரான கிஷன் தாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'சி யூ' திரைப்படத்தில் இடம் பெற்ற 'ஏகாந்தம்' எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் சந்தோஷ் ஸ்ரீவட்சன் இயக்கத்தில் உருவாகி வரும் 'சி யூ' திரைப்படத்தில் கிஷன் தாஸ், சஞ்சனா, எம். எஸ். பாஸ்கர், அருண்குமார், கார்த்திக் குமார், அட்சயா ஹரிஹரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சந்தீப் கே. விஜய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீனம் இசையமைத்திருக்கிறார்.

ரொமாண்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ ஆர் என்டர்டெயின்மெண்ட்- டி ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் அஜ்மல் கான், ரியா,  இயக்குநர் விஜய் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் அறிமுக காணொளி வெளியாகி ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட டிஜிட்டல் பார்வைகளை பெற்று படத்தை பற்றிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்த நிலையில், தற்போது இப்படத்தில் இடம் பெற்ற 'ஏகாந்தம் இதுவா திரை நீ  போட' எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்தப் பாடலை பாடலாசிரியர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் எழுத, பின்னணி பாடகி சக்தி ஸ்ரீ கோபாலன் மற்றும் றாப் இசை பாடகர் வாகீசன் ராசையா ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். காதல் உணர்வை வெளிப்படுத்தும் மெல்லிசையுடன் றாப் இசையை இணைத்து உருவாகி இருக்கும் இந்த பாடல் ஒரு பிரிவு இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் மணிகண்டன் வெளியிட்ட 'இறுதிப் பக்கம்...

2026-10-10 17:17:22
news-image

“மக்கள் செல்வன்” விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-10-10 17:15:01
news-image

ராம் நிஷாந்த் நடிக்கும் 'சுடர்' படத்தின்...

2026-10-10 17:00:54
news-image

சரண் நடிக்கும் 'எனிமி ஒஃப் தி...

2026-10-10 16:59:39
news-image

எம்.எஸ். பாஸ்கர் நடிக்கும் 'விடியும் காத்திரு'...

2026-10-10 16:44:20
news-image

நவீன் முரளிதர் நடிக்கும் 'காட்டேஜ்' படத்தின்...

2026-10-10 16:43:08
news-image

E 1 - திரைப்பட விமர்சனம்

2026-10-09 15:17:30
news-image

ஆல் பாஸ் - திரைப்பட விமர்சனம்

2026-10-09 15:16:52
news-image

நடிகர் வெற்றி நடிக்கும் 'பரிட்' திரைப்படத்தின்...

2026-10-09 14:30:24
news-image

விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'ரண பலி'...

2026-10-09 14:27:08
news-image

சித்தி இத்னானி, தேவதர்ஷினி பேய்களாக நடிக்கும்...

2026-10-09 14:11:12
news-image

சூர்யா நடிக்கும் 'சீன்' படத்தின் முதல்...

2026-10-09 14:09:39