நடிகர் சச்சின் நாச்சியப்பன் நடிக்கும் 'சூரியன் மறைந்த மாலை' படத்தின் டைட்டில் பாடல் வெளியீடு

Published By: Digital Desk 2

11 Sep, 2026 | 05:33 PM
image

புதுமுக நடிகர் சச்சின் நாச்சியப்பன் நடிகை நம்ரிதா ஆகியோர் இணைந்து காதலர்களாக நடித்திருக்கும் 'சூரியன் மறைந்த மாலை' திரைப்படத்தினை அறிமுகப்படுத்தும் வகையில், படத்தின் டைட்டிலுக்கான பாடல் மற்றும் லிரிக்கல் விடியோ ஆகியவை வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் ஈஸ்வர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் 'சூரியன் மறைந்த மாலை' திரைப்படத்தில் சச்சின் நாச்சியப்பன் - நம்ரிதா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

எஸ். பிரகதீஷ் பிரபு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ கே ஆர் இசையமைத்திருக்கிறார். ரொமாண்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜி கே என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜி பாலச்சந்தர் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

இத்திரைப்படத்தினை அறிமுகப்படுத்தும் வகையில் 'மேகங்கள் தூவும் விழியில் தீராத காதல் சுகமோ சூரியன் மறைந்த மாலை..' எனத் தொடங்கும் பிரத்யேக பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

 இந்தப் பாடலை பாடலாசிரியர் ஈஸ்வர் கோபாலகிருஷ்ணன் எழுத, பின்னணி பாடகர் யோகன் மனு மற்றும் பின்னணி பாடகி வி யூ எம் ஐஸ்வர்யா ஆகியோர் இணைந்து பாடி இருக்கிறார்கள்.

இந்தப் பாடலில் அறிமுக நடிகர் சச்சின் நாச்சியப்பன் மற்றும் நடிகை நம்ரிதாவின் காதல் உணர்வுகளை வெளிப்படுத்தி இருப்பது.. ஓவியம் போல் ஒய்யாரமாக இருப்பதால்.. ரசிகர்கள் ரசித்து வருகிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் மணிகண்டன் வெளியிட்ட 'இறுதிப் பக்கம்...

2026-10-10 17:17:22
news-image

“மக்கள் செல்வன்” விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-10-10 17:15:01
news-image

ராம் நிஷாந்த் நடிக்கும் 'சுடர்' படத்தின்...

2026-10-10 17:00:54
news-image

சரண் நடிக்கும் 'எனிமி ஒஃப் தி...

2026-10-10 16:59:39
news-image

எம்.எஸ். பாஸ்கர் நடிக்கும் 'விடியும் காத்திரு'...

2026-10-10 16:44:20
news-image

நவீன் முரளிதர் நடிக்கும் 'காட்டேஜ்' படத்தின்...

2026-10-10 16:43:08
news-image

E 1 - திரைப்பட விமர்சனம்

2026-10-09 15:17:30
news-image

ஆல் பாஸ் - திரைப்பட விமர்சனம்

2026-10-09 15:16:52
news-image

நடிகர் வெற்றி நடிக்கும் 'பரிட்' திரைப்படத்தின்...

2026-10-09 14:30:24
news-image

விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'ரண பலி'...

2026-10-09 14:27:08
news-image

சித்தி இத்னானி, தேவதர்ஷினி பேய்களாக நடிக்கும்...

2026-10-09 14:11:12
news-image

சூர்யா நடிக்கும் 'சீன்' படத்தின் முதல்...

2026-10-09 14:09:39