நடிகர் யோகி பாபு நடிக்கும் 'ஆன் ஆர்டினரி மேன்' படத்தினை விளம்பரப்படுத்தும் 'ஹையர்' பாடல் வெளியீடு

Published By: Digital Desk 2

11 Sep, 2026 | 05:33 PM
image

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான யோகி பாபு கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ஆன் ஆர்டினரி மேன் ' படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் படக்குழு உருவாக்கிய 'ஹையர்' பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

நடிகர் ரவி மோகன் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ' ஆன் ஆர்டினரி மேன்'. இதில் யோகி பாபு முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்.

விவியன் அம்புரோஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கெனிஷா இசையமைத்திருக்கிறார். கொமடி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரவி மோகன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் நடிகர் ரவி மோகன் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் அறிமுக காணொளி வெளியாகி மில்லியன் கணக்கிலான டிஜிட்டல் பார்வைகளை பெற்று படத்தை பற்றிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்த நிலையில், அதனை மேலும் அதிகரிக்கும் வகையிலும், இப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையிலும் படக்குழுவினர் 'உள்ளுக்குள்ள உள்ளுக்குள்ள ஃபுல்லா பிளட் சுட சுட ஓடுதடா' எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நடன அசைவுகளுடன் கூடிய காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

ரவி மோகன, யோகி பாபு கூட்டணியில் உருவான இந்தப் பாடல், ரசிகர்களின் பேரன்பினை பெற்று, வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட டிஜிட்டல் பார்வைகளை கடந்து சாதனை படைத்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right