விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் 'பிக் பொஸ் தமிழ்' சமூக ஊடகத்தில் முன்னணி

Published By: Digital Desk 2

11 Sep, 2026 | 05:26 PM
image

சின்னத்திரை மற்றும் டிஜிட்டல் திரை ரசிகர்களுக்கு ஆண்டுதோறும் உற்சாகமூட்டும் நிகழ்ச்சியான 'பிக் பொஸ் தமிழ்' நிகழ்ச்சி ஜியோ ஹாட்ஸ்டார் தமிழில் தொடங்கியவுடன் சமூக ஊடகத்தில் முன்னணி இடத்தை பிடித்திருக்கிறது.

சின்னத்திரை, டிஜிட்டல் திரை, சமூக ஊடகங்கள் ஆகியவற்றின் பேசுபொருளாக, விவாத பொருளாக புது அடையாளத்தை பெற்று இருக்கிறது 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் 'பிக் பொஸ் தமிழ்' நிகழ்ச்சி. ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் இந்த ரியாலிட்டி ஷோவிற்கான வரவேற்பும் நாளாந்தம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த முறை பிக் பொஸ் வீட்டில் லட்சுமி பிரியா, சாதிகா, பிரித்விநாத்,  ஜாவித் ஷெரீப்,  அவினாஷ் அசோக், பிளாக் பாண்டி வினோத் பாபு, சாந்தினி தமிழரசன், சவீன்யா வேலு, குமரன் தங்கராஜன், ராகவ் ரங்கநாதன், தன்யா, எம் கே முகேஷ், அடாவடி அன்சார், மொடலிங் மங்கை முத்தழகி, ஒப்பனை கலைஞர் அஸ்மிதா நீலமேகம் ஆகியோருடன் இந்நிகழ்ச்சியில் பொதுமக்களும் பங்கு பற்றலாம் என்ற அறிவிப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஜேசன் கௌசி, முனியம்மாள், ஷாமா என மொத்தம் 19 பேர் பிக் பொஸ் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார்கள்.

புதிய வகை விளையாட்டு மற்றும் மனித உணர்வுகளுடன் விளையாடும் இந்த நூறு நாள் சவாலில் வெற்றி பெறுவது பெறப்போவது யார் என்பதுதான் ரசிகர்களின் கேள்வியாகவும், எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

தற்போது யாராலும் துல்லியமாக வெற்றியாளர் இவர்தான் என அவதானிக்க இயலவில்லை என்றாலும் 75 நாட்களுக்குப் பிறகு வெற்றியாளர்களின் சுருக்க பட்டியல் வெளியாகும் போது தெரியவரும் என இணையவாசிகள் பின்னூட்டத்தில் பதிவிட்டிருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சி தொடங்கும் தருணத்தில் பிரபல திரைப்பட விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி வெளியேற்றப்பட்டது குறித்து இணையத்தில் எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தாலும் இந்த நிகழ்ச்சி ஆரோக்கியமான போட்டியுடன் அரங்கேறி வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் வெளியாகும்...

2026-10-16 15:21:36
news-image

ரோனி நடிக்கும் 'தீயது வெல்லக் கேளீர்...

2026-10-16 14:50:18
news-image

ரன்பீர் கபூர் நடிக்கும் 'ராமாயணம்' படத்தின்...

2026-10-16 14:49:57
news-image

ஜெயிலர் 2 - திரைப்பட விமர்சனம்

2026-10-16 14:49:01
news-image

ட்ரோன்ஸ் - திரைப்பட விமர்சனம்

2026-10-16 14:47:33
news-image

இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்ட 'ஒட்டாரம்' படத்தின்...

2026-10-15 15:00:15
news-image

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'சத்தியவான் சாவித்திரி'...

2026-10-15 14:59:41
news-image

நடிகர் பிரியன் நடிக்கும் 'வெகுளி' படத்தின்...

2026-10-15 14:15:51
news-image

சிவகார்த்திகேயன் தொடங்கி வைத்த சூரியின் புதிய...

2026-10-15 14:16:31
news-image

நாட்டின் முரண்பாடுகளின் வலிகளை வெளிப்படுத்தும் ‘ரியர்...

2026-10-15 12:00:48
news-image

அலைகளை வென்ற காளி : மண்டாடி!...

2026-10-14 17:19:14
news-image

நடிகர் சசிகுமார் வெளியிட்ட நடிகர் சரணின்...

2026-10-14 15:01:43