தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான பிரபு முதன்மையான வேடத்தில் நடிக்கும் 'அழகிய லைலா' திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் ரெஜீத் இயக்கத்தில் உருவாகும் 'அழகிய லைலா' திரைப்படத்தில் பிரபு, அப்சரா ராணி, யோகி பாபு, தம்பி ராமையா, விடிவி கணேஷ், கிங்ஸ்லி, கே பி வை சரத், பூவையார் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
வினோத் பெருமாள் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சி. சத்யா இசையமைக்கிறார். பொழுதுபோக்கு அம்சங்களுடன் நகைச்சுவையாக தயாராகும் இந்த திரைப்படத்தை ஏ ஆர் எம் ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஏ .ஆர். மதியழகன் மற்றும் ஆரத்தி கிருஷ்ணா ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடக்க விழா உடன் சென்னையில் நடைபெற்றது. இதில் படக் குழுவினர் பங்கு பற்றினர்.
படத்தைப் பற்றி பிரபு பேசுகையில், இப்படக்குழுவினர் அனைவரும் கேரளாவில் இருந்து தமிழில் படத்தை உருவாக்க வருகை தந்திருக்கிறார்கள். இயக்குநர் ரெஜீத் தமிழில் முதன் முதலாக இயக்குகிறார். இப்படத்தின் கதையை ஒன்றரை மணி நேரம் கேட்டு சிரித்து, ரசித்தேன்'' என்றார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM