கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவுக்கு சுதந்திரத்துக்கான விருது

11 Sep, 2026 | 05:33 PM
image

(நா.தனுஜா)

இலங்கை மக்களின் சுதந்திரம் மற்றும் சமூக வாழ்வுக்கான இடைவெளியை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்ட சிவில் சமூக செயற்பாட்டாளரும், மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவின் அயராத முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் 'அட்வகாட்டா' அமைப்பு அவருக்கு சுதந்திரத்துக்கான விருதை வழங்கி கௌரவித்துள்ளது.

லண்டன் பொருளாதாரக் கல்லூரியில் இருந்து ஆரம்பமான பாக்கியசோதி சரவணமுத்துவின் பயணம், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் பல்லின ஜனநாயகம் என்பவற்றைக் கட்டியெழுப்புவதற்குப் பெரிதும் பங்களிப்பு செய்திருப்பதாக அட்வகாட்டா அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அற்கமைய அட்வகாட்டா அமைப்பின் ஏற்பாட்டில் முதன்முறையாக வியாழக்கிழமை (10) கொழும்பில் நடைபெற்ற 'ஏசியா லிபர்ட்டி ஃபோரம்' நிகழ்வில் அட்வகாட்டா அமைப்பின் கல்விக்குழுத் தலைவர் கலாநிதி சரத் ராஜபத்திரனவால் பாக்கியசோதி சரவணமுத்துவுக்கு சுதந்திரத்துக்கான விருது வழங்கப்பட்டது.

1990களில் ஏற்பட்ட தேசிய அரசியல் நெருக்கடியை அடுத்து லண்டனில் இருந்து மீண்டும் நாடு திரும்பிய பாக்கியசோதி சரவணமுத்து, புதிதாக நிறுவப்பட்ட மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தை தனது தலைமைத்துவத்தின்கீழ் வழிநடத்தினார். இதனூடாக சிவில் சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்தல், சுயாதீன தேர்தல்களை உறுதிப்படுத்தல் மற்றும் ஊழல் மோசடிகளை முடிவுக்குக்கொண்டுவரல் என்பவற்றை முன்னிறுத்தி கொள்கை ரீதியில் போராடினார்.

ஆசிய பிராந்தியம் முழுவதிலும் இருந்து புத்திஜீவிகள், கொள்கை வகுப்பாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் உள்ளடங்கலாக நூற்றுக்கணக்கான பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த 'ஏசியா லிபர்ட்டி ஃபோரம்' நிகழ்வு, மக்களின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் என்பவற்றைப் பாதுகாப்பதற்காகத் தனது வாழ்நாளை அர்ப்பணித்த பாக்கியசோதி சரவணமுத்துவின் பங்களிப்புக்கான அங்கீகாரமாக அமைந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறைச்சாலைச் சட்டங்கள் மற்றும் விதிகளைப் புதுப்பிக்க...

2026-10-10 16:22:00
news-image

மெகசின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷிரந்தி ராஜபக்‌ஷவை...

2026-10-10 15:53:19
news-image

பின்னோக்கிச் சென்ற பேருந்து மோதி மோட்டார்...

2026-10-10 15:46:57
news-image

மெட்ரோ பேருந்து மீது மோதிய சொகுசு...

2026-10-10 15:26:47
news-image

சவூதி அரேபிய விமான நிலையங்கள் மீது...

2026-10-10 15:03:27
news-image

மாத்தளையில் பொலிஸார் மீது தாக்குதல் :...

2026-10-10 15:06:34
news-image

யாழில் நீண்டகாலமாக மணல் கடத்தலில் ஈடுபட்டவர்...

2026-10-10 14:41:50
news-image

திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தின் நம்பிக்கைப் பொறுப்பு...

2026-10-10 16:26:27
news-image

அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு சவூதியிடம் சனத்...

2026-10-10 14:26:01
news-image

2027இல் முக்கிய இராஜதந்திர மற்றும் பொருளாதார...

2026-10-10 14:54:47
news-image

போதைப்பொருள் கடத்தல் சந்தேக நபரின் 3.5...

2026-10-10 14:30:02
news-image

அனோஜன் வழக்கு : சவூதி உயர்...

2026-10-10 13:16:59