இன்றைய திகதியில் எம்மில் சிலர் ஐம்பது வயதிற்குப் பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது திடீரென்று காலில் வலி ஏற்படும். இதனால் அவர்கள் தங்களுடைய நடைபயிற்சி செய்யும் தூரத்தை குறைத்துக் கொள்வர்.
ஆனால் நாளடைவில் இவர்கள் தூரத்தை குறைத்து நடைபயிற்சி செய்தாலும், காலில் வலி உண்டாகும். அதன் பிறகு அவர்களால் நடக்க இயலாத நிலையில் வலி உருவெடுக்கும் போது தான்... அவர்கள் வைத்தியர்களை சந்தித்து ஆலோசனை பெறுவார்கள்.
அந்த தருணத்தில் அவர்களுடைய கால்பகுதியில் உள்ள ரத்த நாளங்களில் கடுமையான அடைப்பு பாதிப்பு ஏற்பட்டிருக்கும். இதனை மருத்துவ மொழியின் அயோர்ட்டோஃபைமெரல் என குறிப்பிட்டு, அதற்குரிய நவீன சத்திர சிகிச்சை மூலம் நிவாரணம் வழங்குகிறார்கள்.
பொதுவாக புகைப்பிடிக்கும் பழக்கம், உயர் குருதி அழுத்த பாதிப்பு - உயர் கொழுப்பு பாதிப்பு, இதயம் தொடர்பான பாதிப்பு- உடற்பருமன் என பல்வேறு காரணங்களால் இதயத்தில் இருந்து கால்களுக்கு தூய்மையான குருதியை எடுத்துச் செல்லும் மிகப்பெரிய ரத்த நாளப் பகுதியில் அடைப்பு பாதிப்பு ஏற்படுகிறது.
இதனை தொடக்க நிலையில் அவதானித்தால், நவீன மருத்துவ தொழில் நுட்பங்களுடன் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சை மூலம் நிவாரணம் வழங்க இயலும்.
ஆனால் பாதிப்பு தீவிரமடைந்திருந்தால் பரிசோதனைகளை மேற்கொண்டு PTFE எனும் பாலி டெட்ரா ப்ளுரோ எத்திலீன் என்ற செயற்கை இழையால் உருவாக்கப்பட்ட பொருளை, உடலுக்குள் பொருத்தி குருதி ஓட்டத்தை சீரமைப்பர்.
இதயத்திலிருந்து குருதியை எடுத்துச் செல்லும் முதன்மையான ரத்த நாளத்தில் இடுப்பு பகுதிக்கு கீழ் பாரிய அடைப்பு பாதிப்பு ஏற்பட்டால் அல்லது கடுமையான கொழுப்பு படிவு பாதிப்பு ஏற்பட்டு அதன் காரணமாக குருதியோட்டம் முற்றாக தடைபட்டிருந்தால் இத்தகைய நவீன சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, முழுமையான நிவாரணம் வழங்கப்படுகிறது.
இத்தகைய சத்திர சிகிச்சையின் போது பாவிக்கப்படும் பொருட்கள் உறுதியானது என்பதாலும்... ரத்தக் கசிவை தடுக்கும் ஆற்றல் கொண்டதாலும் உடலில் நீண்ட நாட்கள் வரை எந்தவித பக்க விளைவையும் ஏற்படுத்தாமல் இயங்கும் என்பதாலும், இத்தகைய செயற்கை நாளத்தை பொருத்துகிறார்கள்.
இத்தகைய சத்திர சிகிச்சைக்குப் பிறகு நோயாளிகள் விரைவில் நடக்க தொடங்குகிறார்கள். அத்துடன் தங்களுடைய நாளாந்தக் கடமையை மேற்கொள்கிறார்கள்.
வைத்தியர் சரவணன்
தொகுப்பு அனுஷா



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM