கணவன்- மனைவி இடையேயான ஒற்றுமை மகிழ்ச்சிகரமாக நீடிக்க...!?

Published By: Digital Desk 2

11 Sep, 2026 | 05:01 PM
image

இன்றைய சூழலில் திருமணமான தம்பதிகள் கருத்தொற்றுமையுடன் இல்லறத்தை நடத்துவது என்பது பெரும் சவாலாக இருக்கிறது. கணவன்-  மனைவி என இருவரும் தங்களது சுய அடையாளத்தையும், சுய மரியாதையும் எந்த தருணத்திலும் இழந்து விடாமல் குடும்பம் என்ற அமைப்பை முன்னெடுத்துச் செல்வதில் உணர்வு ரீதியான தாக்குதல்கள் விவரிக்க இயலாத கோணங்களில் அடிக்கடி எதிர்கொள்கிறார்கள்.

இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டிருந்தாலும் புற சூழ்நிலை காரணிகளால் புரிதலில் ஏற்படும் இடைவெளியின் காரணமாக இவர்கள் தங்களுக்குள் மனக்கசப்பை வளர்த்தெடுத்து கொள்கிறார்கள்.

அந்த மன கசப்பு இருவருக்கும் இடையே கணவன்- மனைவி என்ற உறவில் விரிசலை ஏற்படுத்தி, பிரிவை நோக்கி பயணிக்க வைக்கிறது.

இருவரும் ஒன்றாக இணைந்து வாழ வேண்டும் என விரும்பினாலும், சூழல்கள் அதற்கு எதிராக அமையும் தருணத்தில் சூட்சமமாக ஒரு விடயத்தை மேற்கொண்டால்.. அவர்கள் பிரிவை நோக்கி பயணிக்க மாட்டார்கள் என்றும், தங்களுடைய சூழலை மறுபரிசீலனை செய்து, மீண்டும் ஒன்றிணைவார்கள் என்றும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் உறுதிப்பட தெரிவிக்கிறார்கள்.

இதற்காக அவர்கள் பின்பற்ற வேண்டிய அந்த சூட்சமத்தையும் அவர்கள் பின்வருமாறு விவரித்திருக்கிறார்கள்.

விதைகள் விற்பனை நிலையத்தில் ஆல மரத்தை வளர்த்தெடுக்கும் விதைகளோ அல்லது ஏற்கனவே வளர்ந்த ஆல மரத்தின் சிறிய அளவிலான வேர்களையோ அதற்குரிய முறைப்படி வெட்டி எடுத்து, அதனை தம்பதிகள் இருவரும் அவர்களுக்கு அருகே உள்ள சிவாலயத்தின் வளாகத்தில் ஆலய நிர்வாகத்தின் அனுமதியை பெற்று அந்த ஆலமர விதை அல்லது ஆலமர வேரை பதியமிட வேண்டும்.

அதனைத் தொடர்ந்து நீர் ஊற்றி, வளர்த்தெடுத்தால் இருவருக்கும் இடையே உள்ள புற சூழல்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகி, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இல்லறத்தை இனிமையாக தொடர்ந்து நடத்துவர்.

தொகுப்பு: சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடைகளை அகற்றும் எளிய வழிமுறை

2026-10-10 17:17:58
news-image

ஜாதகத்தை எப்படி? எப்போது? வலிமை படுத்த...

2026-10-09 14:31:28
news-image

பெண் சாபம் - பெண் தோஷம்...

2026-10-08 17:02:16
news-image

செய்வினை கோளாறு பாதிப்பிலிருந்து நீங்குவதற்கான எளிய...

2026-10-07 16:02:06
news-image

நிதி பற்றாக்குறையை சமாளிப்பதற்கான பிரத்யேக குறிப்பு..!?

2026-10-06 15:54:16
news-image

பரம்பரை தோஷம் நீங்குவதற்கான எளிய குறிப்பு!?

2026-10-05 13:38:49
news-image

திருமணத் தடையை நீக்கும் எளிய வழிபாடு

2026-10-03 16:04:39
news-image

நாட்பட்ட நோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-10-06 13:53:52
news-image

குல தெய்வத்தின் அருளை பெறுவதற்கான சூட்சம...

2026-10-01 16:28:18
news-image

ஒக்டோபர் மாத ராசி பலன்கள் -...

2026-10-01 14:17:53
news-image

வெற்றியை துல்லியமாக அவதானிப்பது எப்படி...?

2026-09-30 16:29:28
news-image

செல்வ வளத்தை அதிகரிக்கும் பிரத்யேக குறிப்பு!

2026-09-29 14:10:46