வாழ்நாள் போட்டித் தடையை எதிர்த்து மேன்முறையீடு செய்த மனு மீதான விசாரணையில் தோல்வியைத் தழுவிய இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், தனது ஆற்றாமையை ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளார்.

‘இந்தியன் ப்ரீமியர் லீக்’ இ20 போட்டித் தொடரின்போது ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டமை உறுதி செய்யப்பட்டதையடுத்து, அனைத்து வித சர்வதேசப் போட்டிகளிலும் விளையாட ஸ்ரீசாந்துக்கு இந்திய கிரிக்கெட் சபை வாழ்நாள் தடை விதித்தது.

இதை எதிர்த்து ஸ்ரீசாந்த் மேன்முறையீடு செய்ததையடுத்து, அது குறித்த வழக்கு கேரள நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை உறுதி செய்து தீர்ப்பளித்தனர்.

இதையடுத்து, ட்விட்டர் கணக்கில் தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ள ஸ்ரீசாந்த், “மிக மோசமான தீர்ப்பு... எனக்கு மட்டும் தனிச் சட்டமா? உண்மையான குற்றவாளிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? சென்னை சுப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் மீது நடவடிக்கை இல்லையா?” என்று குறிப்பிட்டுள்ளார்.