முல்லைத்தீவில் குடிநீர் வழங்கல் தேவை 20 சதவீதமே பூர்த்தி; பிராந்திய அலுவலகம் அமைக்கப்படவில்லை – ரவிகரன்!

11 Sep, 2026 | 03:22 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை கிட்டத்தட்ட 20 சதவீத குடிநீர் வழங்கல் தேவையே முழுமைப்படுத்தப்பட்டுள்ளது.முல்லைத்தீவில் இதுவரை பிராந்திய நீர் வழங்கல் முகாமையாளர் அலுவலகம் நிறுவப்படாமையால் மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள். வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

எனவே பெற்றோலியம் மற்றும் நீர்வழங்கல் சார்ந்த சேவைகளின் விலை, தரம், பாதுகாப்பு, சேவையின் தொடர்ச்சி மற்றும் நுகர்வோர் முறைப்பாடுகள் என்பவற்றை ஒருங்கிணைத்து சுயாதீனமாக மேற்பார்வை செய்யும் ஒழுங்குபடுத்தும் கட்டமைப்பு தேவை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில்  வெள்ளிக்கிழமை (11)   நடைபெற்ற  பெற்றோலியம், எரிபொருள் மற்றும் நீர் சார்ந்த சேவைகள் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஒழுங்குபடுத்தலுக்குள் கொண்டுவர வேண்டும் என்று எதிர்க்கட்சியின் உறுப்பினர் நளின் பண்டார முன்வைத்த தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

பெற்றோலியம்,எரிபொருள் மற்றும் நீர் சார்ந்த சேவைகள் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஒழுங்குபடுத்தலுக்குள் கொண்டுவர வேண்டுமெனக் கோரும் இப்பிரேரணை வரவேற்புக்குரியது.

விலை,தரம், பாதுகாப்பு, சேவையின் தொடர்ச்சி மற்றும் நுகர்வோர் முறைப்பாடுகள் என்பவற்றை ஒருங்கிணைத்து சுயாதீனமாக மேற்பார்வை செய்யும் ஒழுங்குபடுத்தும் கட்டமைப்பு  மின்சாரத்துறைக்கு கிடைப்பதைப் போல பெற்றோலியம் மற்றும் நீர் சார்ந்த சேவைகளுக்கும் கிடைக்கவேண்டும். வன்னி தேர்தல் மாவட்டத்தில் இதன் தேவை மிக அதிகமாக உள்ளது.

முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களின் பரந்த, சிதறிய கிராமங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் போது அது ஒரு போக்குவரத்துப் பிரச்சினையாக மாத்திரமன்றி குடும்பங்களின் வருமானத்தையும் உணவுப்பாதுகாப்பையும் நேரடியாகப் பாதிக்கும் காரணியாகி விடுகிறது.

வன்னியின் பல கிராமங்கள் இன்னமும் குடிநீர்த் தேவைக்காக தாங்கிகளில் நிரப்பப்படும் நீரைப் பெற்று பயன்படுத்தும் நிலையிலும் உள்ளன. முல்லைத்தீவில் உள்ள 900 இற்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளிகள் உள்ளனர். ஒரு பொறியியல் தொழில்நுட்ப பீட மாணவர் அண்மையில் இரு சீறுநீரகங்களும் செயலிழந்து மரணித்துள்ளார்.

தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட 8500 குடிநீர் இணைப்புகள் மாவட்டத்தின் கிட்டத்தட்ட 20மூ தேவையே முழுமைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.  

இலங்கையில் பிராந்திய நீர் வழங்கல் முகாமையாளர் அலுவலகங்கள் இல்லாத மாவட்டங்கள் கிளிநொச்சியும் முல்லைத்தீவும் தான். இவ்வாறான முகாமையாளர் அலுவலகம் இன்றிய நிலையில்இ நீர் வழங்கல் தொடர்பான முறைப்பாடுகளுக்கான தீர்வு காணல் மாதாந்த கட்டணப் பட்டியலை சீராக்கல்இ நீர் பரிசோதனைஇ ஆய்வுகூட வசதிகள்இ உத்தியோகபூர்வ நிதி நடவடிக்கைகளுக்கான காசாளர் வசதி உள்ளிட்ட பல்வேறு சேவைகளைப் பெறுவதற்காகவும் 100 கிலோமீற்றருக்கும் அதிக தூரம் பயணித்து யாழ்ப்பாணம் செல்லவேண்டிய நிலை காணப்படுகிறது.

இந்நிலையில் புதிய நீர் இணைப்புத் தாமதம்,நீர்த்தரம், தொடர்ச்சியற்ற விநியோகம்,குறைந்த நீரழுத்தம் தொடர்பான முறைப்பாடுகளைச் சுயாதீனமான விசாரிக்கும் கட்டமைப்பு வன்னி மக்களுக்கு அத்தியாவசியமாகிறது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களின் குறைந்த சேமிப்புத் திறன், மின்வெட்டு நேரத்திலும் சேவையைத் தொடர்வதற்கான மாற்று மின்வழங்கல் கட்டமைப்பு, தீப்பாதுகாப்பு, அளவீட்டுத்துல்லியம் மற்றும் நுகர்வோர்க்கான அடிப்படை வசதிகள் என்பன கட்டாயத் தரநிலைகளாக நிர்ணயிக்கப்பட்டு அவை காலமுறைப்படி கண்காணிக்கப்படவேண்டிய தேவை காணப்படுகிறது.

மக்கள் தொகை, அருகிலுள்ள நிரப்பு நிலையத்துக்கான தூரம் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் எரிபொருள் நிரப்பு நிலைய விரிவாக்கத்திற்குரிய தேவையும் காணப்படுகிறது. எனவே, அரச நிறுவனங்களுக்கு தேவையற்ற நிதிச்சுமையை ஏற்படுத்தாமல் அவற்றின் செயற்பாட்டுத் திறனை மேம்படுத்தி மக்களுக்கு வெளிப்படையானதும் நடுநிலையானதும் தரமானதுமான சேவையை உறுதிப்படுத்தும் வகையில் மேற்படி இரு சேவைகளை சட்ட மற்றும் அமுலாக்க அதிகாரங்களுடன் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறைச்சாலைச் சட்டங்கள் மற்றும் விதிகளைப் புதுப்பிக்க...

2026-10-10 16:22:00
news-image

மெகசின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷிரந்தி ராஜபக்‌ஷவை...

2026-10-10 15:53:19
news-image

பின்னோக்கிச் சென்ற பேருந்து மோதி மோட்டார்...

2026-10-10 15:46:57
news-image

மெட்ரோ பேருந்து மீது மோதிய சொகுசு...

2026-10-10 15:26:47
news-image

சவூதி அரேபிய விமான நிலையங்கள் மீது...

2026-10-10 15:03:27
news-image

மாத்தளையில் பொலிஸார் மீது தாக்குதல் :...

2026-10-10 15:06:34
news-image

யாழில் நீண்டகாலமாக மணல் கடத்தலில் ஈடுபட்டவர்...

2026-10-10 14:41:50
news-image

திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தின் நம்பிக்கைப் பொறுப்பு...

2026-10-10 16:26:27
news-image

அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு சவூதியிடம் சனத்...

2026-10-10 14:26:01
news-image

2027இல் முக்கிய இராஜதந்திர மற்றும் பொருளாதார...

2026-10-10 14:54:47
news-image

போதைப்பொருள் கடத்தல் சந்தேக நபரின் 3.5...

2026-10-10 14:30:02
news-image

அனோஜன் வழக்கு : சவூதி உயர்...

2026-10-10 13:16:59