பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகச் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இந்தியாவுக்கு செல்லவுள்ள நிலையில், தலைநகர் புதுடெல்லியில் மஜ்னு கா திலா பகுதியில் வசிக்கும் புலம்பெயர்ந்த திபெத்திய சமூகத்தினர் அவருக்கு எதிராகக் கவனயீர்ப்புப் பேரணி மற்றும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
சீனாவினால் திபெத்தியர்கள் மீது திணிக்கப்படும் அடக்குமுறைகள் மற்றும் 'இன ஒற்றுமைச் சட்டத்தை' உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி அமைதியான முறையில் இப்போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
சீன அரசாங்கத்தினால் கடந்த ஜூலை மாதம் முதலாம் திகதி அமுல்படுத்தப்பட்ட 'இன ஒற்றுமை மற்றும் வளர்ச்சி' சட்டமூலத்தை உடனடியாக இரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இச்சட்டம் திபெத்தியர்களின் கலாச்சார மற்றும் மொழியியல் தனித்துவத்தைச் சீரழிப்பதாக உரிமைக் குழுக்கள் குற்றம் சாட்டுகின்றன.
நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை: 14 ஆவது தலாய் லாமா மற்றும் திபெத்திய மத்திய நிர்வாகத்தின் பிரதிநிதிகளுடன் சீனா எவ்வித முன்நிபந்தனைகளுமின்றி உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்.
திபெத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
திபெத்திய நாடுகடந்த பாராளுமன்ற உறுப்பினர் வாங்டு டோர்ஜி,
"இந்தியாவின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டுமெனில் திபெத் சுதந்திரமடைவது அவசியம்" எனத் தெரிவித்து இந்திய அரசிற்குத் தனது ஆதரவுக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
நாடுகடந்த திபெத்திய அரசாங்கத்தின் தலைவர் பென்பா செரிங்,
சீனாவினால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டங்கள் அதன் சொந்த அரசியலமைப்பு உறுதியளிப்புகளுக்கு முரணாக உள்ளதாகவும், இது திபெத்தியர்களைக் கட்டாயமாகச் சீனக் கலாச்சாரத்திற்குள் ஒருங்கிணைக்கும் முயற்சி எனவும் எச்சரித்துள்ளார்.
தேசிய ஒற்றுமை என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் அடக்குமுறைகளால் ஒருபோதும் உண்மையான அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் ஏற்படுத்த முடியாது எனத் திபெத்திய சமூகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM