மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் அரசாங்கம் காலம் கடத்துகிறது – சஜித் பிரேமதாச

Published By: Digital Desk 2

11 Sep, 2026 | 03:21 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

மாகாண சபைத் தேர்தல் முறைமை தொடர்பில் ஆராய்ந்து யோசனை மற்றும் விதப்புரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட செற்குழுவின் கால எல்லையை மேலும் நீடிப்பதன் மூலம் அரசாங்கம் மாகாணசபை தேர்தலை நடத்தாமல் பிற்போடுவதற்கு திட்டமிட்டு வருகிறது. மக்களின் உரிமைகளை மீறாமல் மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி்த் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல் முறைமை தொடர்பில் ஆராய்ந்து யோசனை மற்றும் விதப்புரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட செற்குழுவின் காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீடிப்பதற்கு இன்று பாராளுமன்றத்தில் அரசாங்கம் முன்வைத்த பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

மாகாண சபைகள் தேர்தல் முறைமை தொடர்பான குழுவின் கால அவகாசத்தை நீடிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். மாகாண சபை தேர்தலை நடத்துவதைத் தடுப்பதற்காகவே இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இக்குழுவின் கால அவகாசத்தை நீடிப்பது என்பது மக்களுக்கு மாகாண சபை தேர்தலை நடத்தும் வாய்ப்பை இழக்கச் செய்வதாகும்.

இவ்வேளையில் நிகழ வேண்டியது இக்குழுவின் கால அவகாசத்தை நீடிப்பது அல்ல, மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துவதாகும்.

அரசாங்கம் மக்களுக்கு பயப்படவில்லை என்றால்  மாகாண சபை தேர்தலை நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பழைய முறையின் கீழாவது மாகாண சபை தேர்தலை நடத்துமாறு கோட்டுக்கொள்கிறேன்.

மேலும், மாகாண சபை தேர்தலை ஒத்திவைப்பதற்காக இக்குழுவின் கால அவகாசத்தை நீடிப்பது அடிப்படை உரிமையை மீறும் நடவடிக்கையாகவே   காணப்படுகின்றது.

நாட்டு மக்களின் இறைமையை இது மீறுவதால், ஜனநாயகத்திற்கு எதிரான இந்நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன், எதிர்க்கட்சி இதற்கு எதிர்ப்பைத் தெரிவிக்கின்றது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறைச்சாலைச் சட்டங்கள் மற்றும் விதிகளைப் புதுப்பிக்க...

2026-10-10 16:22:00
news-image

மெகசின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷிரந்தி ராஜபக்‌ஷவை...

2026-10-10 15:53:19
news-image

பின்னோக்கிச் சென்ற பேருந்து மோதி மோட்டார்...

2026-10-10 15:46:57
news-image

மெட்ரோ பேருந்து மீது மோதிய சொகுசு...

2026-10-10 15:26:47
news-image

சவூதி அரேபிய விமான நிலையங்கள் மீது...

2026-10-10 15:03:27
news-image

மாத்தளையில் பொலிஸார் மீது தாக்குதல் :...

2026-10-10 15:06:34
news-image

யாழில் நீண்டகாலமாக மணல் கடத்தலில் ஈடுபட்டவர்...

2026-10-10 14:41:50
news-image

திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தின் நம்பிக்கைப் பொறுப்பு...

2026-10-10 16:26:27
news-image

அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு சவூதியிடம் சனத்...

2026-10-10 14:26:01
news-image

2027இல் முக்கிய இராஜதந்திர மற்றும் பொருளாதார...

2026-10-10 14:54:47
news-image

போதைப்பொருள் கடத்தல் சந்தேக நபரின் 3.5...

2026-10-10 14:30:02
news-image

அனோஜன் வழக்கு : சவூதி உயர்...

2026-10-10 13:16:59