பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், அவரது தாயார் மற்றும் அவரது சகோதரர் ஆகிய மூவர் மீதும், அவரது சகோதரரின் மனைவி குடும்ப வன்முறைப் புகார் ஒன்றை குருக்ராம் பொலிஸ் நிலையத்தில் அளித்துள்ளார்.
யுவராஜ் சிங்கின் சகோதரர் ஸோராவர் சிங்கின் மனைவி ஆகன்ஷ்கா. இவர், இந்தியாவின் புகழ்பெற்ற ‘பிக்பொஸ்’ நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களுள் ஒருவர். தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை அடுத்து இவர் கணவரைப் பிரிந்து வாழ்கிறார்.
புகார் குறித்து ஆகன்ஷ்கா கருத்துக் கூற மறுத்துவிட்டபோதும், இது குறித்து வழக்கு ஒன்றும் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக அவரது தரப்பு சட்டத்தரணியான ஸ்வாதி சிங் மலிக் அதை உறுதிசெய்துள்ளார்.
“குடும்ப வன்முறை என்பது உடல் ரீதியானது மட்டுமல்ல. உணர்வு மற்றும் பொருளாதார ரீதியான அடக்குமுறையும் அதில் அடங்கும். இதன்படி, யுவராஜ் சிங், அவரது சகோதரர் மற்றும் தாயார் மீது எனது கட்சிக்காரர் ஆகன்ஷ்கா புகார் பதிவுசெய்துள்ளார்.
“இந்த வன்முறை குறித்து யுவராஜ் அறிந்திருந்தபோதும், அதை எதிர்த்து எதுவும் கூறாமல் மௌனியாக இருந்துவிட்டார். அத்துடன், ஆகன்ஷ்கா குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அவரது கணவரும் தாயாரும் வற்புறுத்தியபோது, தனது தாயாரின் சொல்படி ஆகன்ஷ்கா நடக்க வேண்டும் என்றும், தனது தாயாரே குடும்பத் தலைவி என்றும் யுவராஜ் வற்புறுத்தியுள்ளார். இதையடுத்தே அவரையும் இந்தப் புகாரில் ஆகன்ஷ்கா சேர்த்துள்ளார். குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து முடிவெடுப்பதில் மனைவிக்கும் உரிமை உண்டு. அதை யாரும் மறுக்க முடியாது” என்று சட்டத்தரணி ஸ்வாதி சிங் மலிக் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு எதிர்வரும் சனிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM