200 ஆண்டுகளாக முகவரியின்றி வாழ்ந்த மலையக மக்களுக்கு முகவரிகளை வழங்க நடவடிக்கை – அமைச்சர் சமந்த வித்யாரத்ன

11 Sep, 2026 | 02:21 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

200 ஆண்டுகாலமாக முகவரி  இல்லாமல் இருந்த மலையக மக்களுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே முகவரிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. பெருந்தோட்ட மக்களுக்கு இதுவரை காலமும் மறுக்கப்பட்ட உரிமைகளை  சட்ட ரீதியில் வழங்குவோம். மலையகத்துக்கான சகல அபிவிருத்திகளையும் முன்னெடுப்போம் என  பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்   வெள்ளிக்கிழமை (11)  நடைபெற்ற அமர்வில்  வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில்,  தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

மலையக மக்கள் கடந்த 2023 ஆம் ஆண்டுடன்  இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன.இந்தக் காலப்பகுதியில் அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டன.  பல நெருக்கடிகளுக்கு அவர்கள் முகங்கொடுத்தார்கள்.

மலையக  மக்கள் தொடர்பில் 2023ஆம் ஆண்டில்  ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க  ஹட்டனில் பிரகடனமொன்றை வெளியிட்டார். அதன்போது தமது ஆட்சியில் அவர்களுக்கான உரிமைகளை வழங்குவதாக உறுதியளித்தார். அதேபோன்று அவர்களின் மனித உரிமைகளும் மீறப்பட்டிருந்தன. அந்த மக்களுக்கென முகவரி  இருக்கவில்லை.

தோட்ட அதிகாரி ஊடாகவே   கடிதங்கள் மக்களை சென்றடைந்தன. முக்கிய கடிதங்கள் காலம் தாழ்த்தியே கிடைத்தன. இதனால் அந்த மக்களுக்கென முகவரிகளை  வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  மூன்றரை வருடங்களாக முகாம்களில் இருந்த மக்களுக்கு அண்மையில் கபரகலையில் வீடமைப்பு திட்டத்தில் வீடுகளுக்கு முகவரிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை மலையக  மக்களுக்காக வீடுகளை வழங்கும் வேலைத்திட்டங்கள் கடந்த காலங்களில் முறையாக செயற்படுத்தப்படவில்லை. அந்த வீடுகளில் இங்கிருந்தவர்களே இருந்தனர்.

ஆனால் அந்த முறைமையை மாற்றி அந்த மக்களுக்கே வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இந்த வருடத்திற்குள் ஆயிரம் வீடுகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அத்துடன் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 400 ரூபாவினால் நாங்கள் அதிகரிக்க நடவடிக்கை எடுத்தோம்.

மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை சம்பள அதிகரிப்பின் ஊடாக மாத்திரம் முன்னேற்ற முடியாது. இதுவரை  காலமும் அவர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளை முறையாக பெற்றுக்கொடுப்போம் . மலையகத்துக்கான அபிவிருத்தி பணிகளை   முன்னெடுத்துள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறைச்சாலைச் சட்டங்கள் மற்றும் விதிகளைப் புதுப்பிக்க...

2026-10-10 16:22:00
news-image

மெகசின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷிரந்தி ராஜபக்‌ஷவை...

2026-10-10 15:53:19
news-image

பின்னோக்கிச் சென்ற பேருந்து மோதி மோட்டார்...

2026-10-10 15:46:57
news-image

மெட்ரோ பேருந்து மீது மோதிய சொகுசு...

2026-10-10 15:26:47
news-image

யக்கல - கிரிக்கித்தமுல்ல பகுதியில் கசிப்புடன்...

2026-10-10 16:39:25
news-image

சவூதி அரேபிய விமான நிலையங்கள் மீது...

2026-10-10 15:03:27
news-image

மாத்தளையில் பொலிஸார் மீது தாக்குதல் :...

2026-10-10 15:06:34
news-image

யாழில் நீண்டகாலமாக மணல் கடத்தலில் ஈடுபட்டவர்...

2026-10-10 14:41:50
news-image

திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தின் நம்பிக்கைப் பொறுப்பு...

2026-10-10 16:26:27
news-image

அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு சவூதியிடம் சனத்...

2026-10-10 14:26:01
news-image

2027இல் முக்கிய இராஜதந்திர மற்றும் பொருளாதார...

2026-10-10 14:54:47
news-image

போதைப்பொருள் கடத்தல் சந்தேக நபரின் 3.5...

2026-10-10 14:30:02